09 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-2

எந்த ஒரு நிலையிலும் எப்படி சூரியன் சந்திரனின் சஞ்சாரம், கோள்களின் அசைவுகளை நம்மால் மாற்றியமைக்க முடியாதோ அதுபோலவே நம் வாழ்வில் வரும் நல்ல மற்றும் தீய நிகழ்வுகளையும் நம்மால் முற்றிலும் மாற்றி அமைக்க முடியாது, எனும் கருத்துகள் நிலவுகிறது.  ஒருசில மதங்களில் கூட ஜோதிடம், எதிர்கால கணிதம் ஆகியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவைகளின் ஆய்வுக்கு நாம் போக வேண்டாம். ஆனாலும் இது உண்மையா என்பதனை நாம் உணர்ந்தே ஆகவேண்டும்.
சரியாக சொன்னால் தகிக்கும் சூரியனை குளிர வைக்க முடியுமா? மார்கழி குளிரை விளக்கி வைக்க முடியுமா? மின்னலை நிறுத்த முடியுமா? மழையினை நிறுத்தி வைக்கவோ அல்லது நினைத்த பொது பெய்ய வைக்கவோ முடியுமா? முடியாது ஒருபோதும் முடியவே முடியாது. சரி அப்படியே இந்த விசயங்களை விட்டு விட்டோமா?

தகிக்கும் சூரியன் வந்தால் என்ன? அவர் அவர்களின் வசதிக்கும், இருப்புக்கும் தகுந்தவாறு மரங்களின் நிழல் முதல் குடைகளும், வீடுகளும், வீடுகளில் மின்விசிறிகளும், குளிர் சாதனம் செய்யப்பட அறைகளும் உண்டாக்கிக் கொண்டோம் அல்லவா. ஏர் கண்டிஷன் அறையில் உள்ளவருக்கு வெய்யிலின் தாக்கம் இருக்குமா? அந்த நிலையில் அவருக்கு வெய்யில் வந்தாலும் வராவிட்டாலும் அதனால் பாதிப்பு இருக்க போவது இல்லை. அவருக்கு பாதிப்பு இல்லை என்பதால் சூரியன் தவறாக செயல் புரிகிறான் எனவும் கொள்ள முடியுமா? அதுபோலவே மார்கழி குளிரையும் போர்வை மற்றும் வெப்பத்தினை பயன்படுத்தி போக்கிக்கொள்ள முடிகிறது. மின்னலின் தாக்கத்தினைக் கூட இடிதாங்கியினை கொண்டு சமாளிக்கிறோம். மழை, இருட்டு, புயல் போன்ற பல்வேறு இயற்கையின் நிகழ்வுகளை கண்டு கற்கால மனிதர்களைப் போல அப்படியே உள்ளோமா? இல்லையே, அவைகளை வென்று நமக்கான சௌகரியமான வாழ்க்கையினை வாழ்கிறோம்.

கிரக பலங்களை வைத்து நமது பாதையில் இன்ன இன்ன விஷயங்கள் குறுக்கிடும் என்பதனை தெளிவாக நமது ஜாதகம் காட்டும். திசாபுத்தி பலன்களை வைத்து,  நம்மை சில குறிப்பிட்ட விஷயங்கள் எதிர்கொள்ளும் வயதுகளை சரியாக கணிக்க முடியும். இவைகளை ஒன்றிணைத்து வாழ்க்கையில் சாதனை செய்ய எண்கணிதம் எனும் நியூமராலாஜி கலையினை பயன் படுத்த வேண்டியதும் அவசியம் ஆகிறது.

No comments:

Post a Comment