27 May 2015

பித்ரு பூஜை ஒரு அறிவியல் பார்வை. (pithru pooja, pitru puja)

மஹாளய பட்சத்தினுள் ஒளிந்திருக்கும்இந்து தர்ம (ஜோதிட) விஞ்ஞான ரகசியம். 

     நமது தாத்தாக்கள்,  பாட்டிகள்,  முப்பாட்டன்கள்,  முப்பாட்டிகள்,  பூட்டன்கள் (தாத்தாவின் தாத்தா)பூட்டிகள் (பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
ஆவணி மாத அமாவாசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?

    ஏனெனில்ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுகளில் ஒன்று கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை! இந்த அமைப்பிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவருகிறது. அந்த மாத இதழின் பெயரே பூஜாரி முரசு. இதன் செப்டம்பர் 2011 ஆம் வெளியீட்டில் 4,5ஆம் பக்கங்களில்விரிவான விளக்கம் வந்திருக்கிறது.(இந்து இயக்கங்கள் இந்து தர்மம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை ஆராய்வதோடுஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுவருகிறது)

    புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள். அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள்தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன. வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார். கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்துசூரிய மண்டலம்நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு (அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள், ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

     பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது. பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின. அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன. இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும். அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது. எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகிசூரியனால் வாழ்விக்கப்படுகிறதோஅப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகிஅதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.

பித்ருக்களின் வழி

   ஒரு மையத்திலிருந்து உண்டானதுபிரளயகாலத்தின் போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும். நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்உடலை விட்டு பிரிந்த உயிர்இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம் (பித்ருக்களின் வழி) என்பார்கள்.

     இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது. இங்கு ஒரு கேள்வி எழலாம்?  பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்ஏது திசைமுடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாமாமாமாண்டமான பிரபஞ்சத்திற்கு ஏது திசை?

   இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும். இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும். பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டுஎது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும். இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.

      கன்னிராசியானதுபூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது. அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது. அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது. நாம் உண்டான மையம் தெற்கு திசையில்கன்னிராசியில் இருக்கவேஇறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள். எனவேஅந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம். அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம். இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம். இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம். அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது. அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.

பித்ருக்களின் காலக்கணக்கு

   சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம் (சந்திரமானம்) என்பது உண்டு. அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது. இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 
அதன் விளக்கம்:
1 பட்சம்                  = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)
2 பட்சம்                  = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)
30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்
12 பித்ருமாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்
இதை திதியாக மாற்றினால்,
ஒரு பித்ரு வருடம்    =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி
ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள்
10,800 திதி/360 திதி    =30 வருடம்

அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும். ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும். அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம். அதனால்பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும் (15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.

  தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும். அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம். இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடுசிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது. இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும்மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம்நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு எனலாம். 

நன்றி!!! வலையுலக நண்பர்கள்.

21 May 2015

அமிதிஸ்ட் எமிதிஸ்ட் கற்களின் அற்புத சக்தி ( amethyst )

                நவரத்தினங்களை போல இல்லாவிடினும் குறிப்பிட்டு சொல்லும்படி சிறப்பான பலனை அளிக்ககூடிய உப ரத்தினங்கள் நூற்றுக்கணக்கில்  உள்ளன. இவ்வகை கற்களும் இயற்கையில் விளையகூடியவைதான்.இந்த கற்களை பெரும்பாலும் எண்கணித  நிபுணர்கள்தான் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், ஜாதகப்படியும்  இந்தகற்களை  அணிந்து கொள்ளலாம்.

      சில உப ரத்தினங்கள் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும்  விளங்குகிறது. இந்த கற்களை பெரும்பாலும் அனைவருமே அணியலாம். இந்த கற்களுக்குள் நட்பு, பகை, தோசம்  ஆகியவை ஏதும் கிடையாது.இந்த கற்கள் நன்மை மட்டுமே செய்யும். ரத்தின நிபுணர்களின் பல வருட ஆராய்ச்சிக்கு  பின்னரே இந்த  வகை கற்கள்  நவரத்தின கற்களுக்கு மாற்றாக பரிந்துரை செய்யபட்டன. அதிகம் பயன்பாட்டில் இருக்கும் உப ரத்தினங்களைபற்றி காண்போம். 

அமிதிஸ்ட் டின் பண்புகள்

     கத்தரி பூ நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் இந்த கல் தமிழில் செவ்வந்தி கல் என அழைக்கபடுகிறது. 
இந்த கல் தெய்வீக அருளை ஆகர்ஷித்து தரும்ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கும், குடியினை மறக்க முடியாதவர்கள் இந்த கல்லை மோதிரமாய் அணிந்தால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். (இதனை அனுபவத்தில் பரிசோதனை செய்துள்ளோம்) விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும். வியாபார தடையை போக்கும். கோபம், விரக்தி ஆகியவற்றிலிருந்து காக்கும். குழந்தையின்மை, திருமணதடை ஆகிய பிரச்சனைகளுக்கு இக்கல்லை  அணியலாம்.

அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்.

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள்வயிற்றுவலிமூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.  தூக்கமின்மை,மாலைக்கண் நோய் , தோல் வியாதி ஆகியவற்றில் இருந்து காக்கும். 

இந்த கல்லை அனைவருமே அணியலாம்.


3,12,21,30 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்,
4,13,22,31 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்,
8,17,26 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்,
மேலும், புஷ்பராக கல்லுக்கு பதிலாக  இந்த கல்லை அணியலாம்.

கம்ப்யூட்டரில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர் வீச்சிலிருந்து காக்கும்.

     அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிவரும்  கதிர்கள் பல நன்மைகள் செய்கிறது. மேலும் இந்த கல்லை பற்றி சொல்ல பல விஷயங்கள்  உள்ளன.  அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் கணினியில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களை தடுத்து விடுகின்றன.  அதாவது  word processor  என்னும் கம்ப்யூட்டர்  கருவிகளை  பயன் படுத்துபவர்கள் ஒரு  சிறிய   அமிதிஸ்ட்  கல்லை VDU ஸ்கிரீனில் வைத்துவிட்டால் போதும் கணினி யில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களில் இருந்து காத்து கொள்ளலாம். இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா. 

வீண் செலவுகள் குறையும்

இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும். பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. பணம் சேர்ப்பது எளிதாகும். குறைந்தது 4 முதல் 20 காரட் எடை அளவு வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும். உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம். நிறைய பணம் மிச்சமாகும்.

எமிதிஸ்ட் மணி மாலை, பர்சில் வைக்க, மோதிரம் செய்ய கற்களின் தேவைக்கு,



19 May 2015

ஓம் மந்திர மகத்துவமும் அறிவியல் உண்மைகளும் ( om aum omm )

ஓம் என்ற மந்திரம்

    ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.




   அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

   இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்! உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

   ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

   ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான  நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

   ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

   ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம் உதிக்கும் சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

http://ptk2numerology.blogspot.in/ 

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே  என தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.



ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

    தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு என்று ஆரம்பித்து ம்என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.



ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

 இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார். அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன. 

   20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,

1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.

2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.

3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.



மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்
ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்
மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம், 
அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்
விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸீம்,  
ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம்
சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

    ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர். அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே  இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

 “நன்றி வலையுலக நண்பர்கள்



15 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-4

        விதியின் கொடுமையில் இருந்து தப்பிக்க விதி அமைத்துக் கொடுத்துள்ள  ஒரு அற்புத வரமே எண்கணித கலையெனும், நியூமராலாஜி கலையாகும். ஜோதிட சாஸ்திரத்தில் பரிகார முறை இருக்கிறது. நாம் சரியான பரிகார முறைகளை தெரிந்துகொள்வதும், பின்னர் அதனை செய்வதும், பின்னர் கிரகங்களின் சஞ்சார நிலைகள், திசாபுத்தி மாறுதல்கள் மூலமாக நாம் மீண்டும் மீண்டும் பரிகாரங்கள் செய்ய வேண்டி வருகிறது. இந்த நிலையில் நமக்கு சக்திவாய்ந்த பரிகார முறையாக எண்கணிதம் எனும் நியூமராலாஜி கலையினை பயன்படுத்த முடியும்.

        நமது பிறப்பு எண், விதி எண், மற்றும் ஹீப்ரு உயிர் எண் என்பது மாறாத சக்திகளாகும். இயற்கையில் அண்ட சராசரங்களும் எப்போதும் மாறாமல் ஒரே சீராக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பொருள்களும் ஒவ்வொரு காந்த சக்திக்கு கட்டுப்பட்டு முறைமை மாறாமல் இயங்கி வருகிறது. அதனால் தான் இரவுபகல், பருவநிலைகள் ஆகியவைகள் ஒரோ சீராக கால அளவு மாறாமல் ஒரே மதிரியாக நடைபெற்று வருகிறது. இதில் மாறுதல்கள் உண்டாகும் பொது குறிப்பிட்ட நிகழ்வுகள் முறைப்படி நிகழாமல் சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிகழுகிறது. அவைகள் நமக்கு நன்மையினை தருவது இல்லை. சரியான பருவத்தில் பெய்யாத மழையும், காற்றும், வெயிலும் நமக்கு துன்பத்தினையே தருகிறது. எந்த ஒரு செயலுக்கும் ஒத்திசைவாக செயல் படுதல் என்பது நமக்கு கூடுதல் பலத்தினை கொடுக்கும்.

        இயற்கையின் சக்தி நமது பிறப்பின் போதே நம் மீது செயல் பட ஆரம்பித்து விடுகிறது. அந்த இயற்கையின் சக்தி என்ன? அதன் போக்கு எப்படி இருக்கும், அதன் தன்மைகள் குணங்கள் மற்றும் வீரியம் என்ன என்பதனை, நமது முன்னோர்கள் அற்புதமான ஞானத்தினாலும் ஆய்வுகளாலும் நிரூபணம் செய்துள்ளார்கள். அவைகளை பலப்பல புத்தகங்களாக நமக்கு அள்ளித்தந்து உள்ளார்கள். குறிப்பாக சப்தங்கள் எழுத்துகள் பற்றி அக்ஷரலக்ஷா என்ற நூல் விவரிப்பதாக கூறுகிறார்கள். அகத்தியரும் எண்கணிதம் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். வராகமிகிரரும் கிரகங்களுக்கு எண்களை கொடுத்துள்ளார். அவர்காலத்தில் ராகு கேது பற்றி கவலைப்படவில்லை போல உள்ளது. அவர் 4, 7 பற்றி குறிப்பிடவில்லை.
தொடரும்....

13 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-3

நமது வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட ஒன்றாக எண்கள் விளங்குகிறது.. கடந்த நூறு ஆண்டுகளில் எண்கள் நமது வாழ்க்கையின் அங்கமாகமே மாறிவிட்டது என்றால் மிகையில்லை. ஆங்கிலேயர்களின் காலத்தில் அஞ்சல் குறியீட்டின் மூலமாக ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒரு எண்களை வழங்கினார்கள். பின்னர் அது வீடுகளின் கதவுகளை ஆக்ரமித்தது. தொலை பேசி அறிமுகம் ஆனதும், இது மேலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.. அடுத்து மெதுவாக தனிமனிதர்களை கூட எண்களால் குறிப்பிடும் நிலையினை இன்றைய வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை மூலம் அடைந்துள்ளோம். இதன் மூலம் எண்களின் ஆதிக்கம் எவ்வளவு வீரியம் மிக்கது என்பதனை அறிய முடிகிறது அல்லவா?


அந்த சக்திமிக்க எண்களை நாம் நமக்கு தேவையான படி வசப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க உதவுவதே எண்கணித கலையின் அடிப்படை நோக்கம். முக்கியமாக இரண்டு விசயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நியூமராலாஜி கலையில் நாம் எண்களை இரண்டு விதமான முறையில் உபயோகம் செய்கின்றோம். ஒன்று: நமது பிறப்பு எண் விதி எண் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்க்கான உரிய எண்களில் பெயரினை அமைப்பது. இரண்டு: நமக்கான அதிர்ஷ்ட எங்களையும், அதிர்ஷ்ட தேதிகளையும் முறையாக பயன்படுத்துவதுவதும் அதன் மூலமாக காரியவெற்றியினை பெறுவதும் ஆகும்.


    அதிர்ஷ்டத்தினை எப்போதும் புறத்தில் இருந்து பெறமுடியாது, அதனை அகத்திலிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்திற்கு இணங்க ஒருவர் தன்னுடைய பெயரினை, பிறந்த தேதிக்கு ஒத்ததாக மாற்றியமைத்தாலே வெற்றியாளராக மாறமுடியும். 

09 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-2

எந்த ஒரு நிலையிலும் எப்படி சூரியன் சந்திரனின் சஞ்சாரம், கோள்களின் அசைவுகளை நம்மால் மாற்றியமைக்க முடியாதோ அதுபோலவே நம் வாழ்வில் வரும் நல்ல மற்றும் தீய நிகழ்வுகளையும் நம்மால் முற்றிலும் மாற்றி அமைக்க முடியாது, எனும் கருத்துகள் நிலவுகிறது.  ஒருசில மதங்களில் கூட ஜோதிடம், எதிர்கால கணிதம் ஆகியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவைகளின் ஆய்வுக்கு நாம் போக வேண்டாம். ஆனாலும் இது உண்மையா என்பதனை நாம் உணர்ந்தே ஆகவேண்டும்.
சரியாக சொன்னால் தகிக்கும் சூரியனை குளிர வைக்க முடியுமா? மார்கழி குளிரை விளக்கி வைக்க முடியுமா? மின்னலை நிறுத்த முடியுமா? மழையினை நிறுத்தி வைக்கவோ அல்லது நினைத்த பொது பெய்ய வைக்கவோ முடியுமா? முடியாது ஒருபோதும் முடியவே முடியாது. சரி அப்படியே இந்த விசயங்களை விட்டு விட்டோமா?

தகிக்கும் சூரியன் வந்தால் என்ன? அவர் அவர்களின் வசதிக்கும், இருப்புக்கும் தகுந்தவாறு மரங்களின் நிழல் முதல் குடைகளும், வீடுகளும், வீடுகளில் மின்விசிறிகளும், குளிர் சாதனம் செய்யப்பட அறைகளும் உண்டாக்கிக் கொண்டோம் அல்லவா. ஏர் கண்டிஷன் அறையில் உள்ளவருக்கு வெய்யிலின் தாக்கம் இருக்குமா? அந்த நிலையில் அவருக்கு வெய்யில் வந்தாலும் வராவிட்டாலும் அதனால் பாதிப்பு இருக்க போவது இல்லை. அவருக்கு பாதிப்பு இல்லை என்பதால் சூரியன் தவறாக செயல் புரிகிறான் எனவும் கொள்ள முடியுமா? அதுபோலவே மார்கழி குளிரையும் போர்வை மற்றும் வெப்பத்தினை பயன்படுத்தி போக்கிக்கொள்ள முடிகிறது. மின்னலின் தாக்கத்தினைக் கூட இடிதாங்கியினை கொண்டு சமாளிக்கிறோம். மழை, இருட்டு, புயல் போன்ற பல்வேறு இயற்கையின் நிகழ்வுகளை கண்டு கற்கால மனிதர்களைப் போல அப்படியே உள்ளோமா? இல்லையே, அவைகளை வென்று நமக்கான சௌகரியமான வாழ்க்கையினை வாழ்கிறோம்.

கிரக பலங்களை வைத்து நமது பாதையில் இன்ன இன்ன விஷயங்கள் குறுக்கிடும் என்பதனை தெளிவாக நமது ஜாதகம் காட்டும். திசாபுத்தி பலன்களை வைத்து,  நம்மை சில குறிப்பிட்ட விஷயங்கள் எதிர்கொள்ளும் வயதுகளை சரியாக கணிக்க முடியும். இவைகளை ஒன்றிணைத்து வாழ்க்கையில் சாதனை செய்ய எண்கணிதம் எனும் நியூமராலாஜி கலையினை பயன் படுத்த வேண்டியதும் அவசியம் ஆகிறது.

08 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-1

நாம் வாழும் இந்த  உலகில் எந்த ஒன்றும் அழிவதில்லை. அதேபோன்று, ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாக நம்மால் சிருஷ்டிக்கவும் இயலாது. எப்போதும் உள்ள ஒன்று காலத்தின் விதிகளுக்கு ஏற்ப, உருவத்திலும், உள்ளடக்கத்திலும் உருமாறிக் கொண்டிருக்கிறது. நாம் இந்த தினத்தில் சந்திரனையும், சூரியனையும் நட்சத்திர மண்டலத்தினையும் பார்க்கிறோம், காலத்தின் கட்டளையால் அவைகள் மறைகின்றன. பின்னர் மீண்டும் மறுநாள் தோன்றுகின்றன. நமது புராணங்களில் இது பற்றி மறு உயிர்த்தல், மறு பிறப்பு பற்றிய இந்தக்கோட்பாட்டிற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.


மனிதன் இப்பிறவியில் செய்யும், பாவ புண்ணியத்திற்கேற்ப அவனின் மறுபிறப்பு நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தப் பிறவியில் அவன் செய்யும் புண்ணிய காரியங்கள், அடுத்த பிறவியில் அதிர்ஷ்டமான ஜாதகம் அமையுமாறு ஒரு கணத்தில் அவனை பிறக்கவைக்கிறது. மறுபிறவியில் இந்தப் பூமியில் வாழும் அவன் வாழ்வு சந்தோஷங்களால் நிறைவடையும். மாறாக பாவ காரியங்களை செய்தவனின் அடுத்த பிறவி வாழ்வு, அதற்கான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக அமைந்துவிடும். எனவும் நமது இந்து சாஸ்த்திரத்தில் நம்புகிறோம். நமது முன் பிறப்பினில் நம்முடைய நடவடிக்கை எப்படியோ அதன் படியே நமது அடுத்த பிறவி அமைகிறது.

பிறக்கும் அந்தக் கணத்திலேயே, கிரகங்கள் அவன் வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானித்து விடுகின்றன என்பதை ஜோதிட சாஸ்திரக் கோட்பாடுகள் நிச்சயிக்கின்றன. ஆகவே ஜோதிட சாஸ்திரம், ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு வாழ்வின் நிலைகளை அனுமானிக்கும் சாத்தியப்பாடுகள் உடையதாய் இருக்கிறது.

குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளிவந்து, தரையைத் தொடும் போது கிரகங்களின், நட்சத்திரங்களின் தாக்கம் பெற்று, அதுமுதல் அதன் எதிர்காலத்தை இவைகளே வடிவமைக்கின்றன. ஜாதகம் என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது என்னவெனில், குழந்தை பிறப்பின் போதான கிரகநிலைகளைப் பற்றிய தெளிவான வாசிப்பாகும். மேலும் இந்த கிரகங்களை குழந்தையின் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணித்தல் என்பதே ஜாதகத்தின் விசேஷம்.

இருண்ட அறையை, சிறு ஜோதி வெளிக்காட்டுவது போல், ஜோதிடம் ஜாதகன் ஒருவனின் வாழ்க்கையில் தெரியாத ஒன்றை அவனுக்கு புரிய வைக்க உதவுவது. சரியான நேரம், சரியான இடம் இவற்றைக் கொண்டு குறிக்கப்பட்ட ஒருவனின் ஜாதகம், அவனின் வாழ்க்கையையும், விதிகளையும், மிகச் சரியாகவே கணிக்கும். வழி தெரியாமல் தடுமாறாமல் இருப்பதற்கு நமக்கு வெளிச்சம் எவ்வளவு அவசியமோ, அவளவு அவசியம் ஜாதகமும், ஜோதிட கலையும். வழியினை அறிந்து நாம் எளிதாக நம்முடைய வாழ்க்கை பயணத்தினை அமைத்துக்கொள்ள நமது ஜாதகம் நமக்கு உதவுகிறது. கண்ணுக்கு தெரியும் பாதையில் நாம் பயணிக்காமல் வெறுமனே பாதையினை பார்த்துக்கொண்டே இருந்தால், எப்படி நம்மால் போய் சேர வேண்டிய இடத்திற்கு போகவே முடியாதோ, அப்படியே, நல்ல காலம் வந்து இருந்தாலும் நாம் முயற்சித்து வாழ்க்கையினில் முன்னேற உத்வேகத்துடன், போரட்டாமல் இருந்தால் அந்த நல்ல காலத்தினை பயன்படுத்தவே முடியாமல் போய் விடுகிறது.


காலத்தின் ஓட்டத்தினை பற்றியும், அதன் பதையினை பற்றியும் புரிந்து கொண்டு சரியாக திட்டமிட்டு உழைத்தால் வெற்றி மிகவும் எளிதாகவும், பெரிதாகவும் பரிணமிக்கும். மாறாக தற்போதைய சூழல் சரியில்லை எனும் பொது கூட மெதுவாக ஜாக்கிரதையாக நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தினை கொண்டு செல்லும் பொது, தோல்விகளும், துயரங்களும் மிகவும் சிறிதாகவே வரும். அதனையும் தெய்வ சக்தியினை துணை கொண்டு மாற்றியமைக்க முடியும்.

07 May 2015

நாக கவசம். நாக தெய்வங்களின் அருள் பெற

கீழ் கண்ட கவசத்தினை தினசரி ஓதி வர
கால சர்ப்ப தோஷம்,
நாக தோஷம்,
குடும்ப தோஷம்
ராகு கேது தோஷங்கள்
நிவர்த்தியாகி குடும்ப ஒற்றுமையும், சர்வ மங்கலங்களும் பெருகும். படித்து பயன் அடையுங்கள். உங்களின் கருத்துக்களை எழுதுங்கள்.  

நாக கவசம்
நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே!

வணங்கும் பக்தர்க் கருளுகிற வளந்தரு நாகராசவே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய் தெற்கினிலே
சுணக்க மின்றிச் சுகந்தருவாய் சோதி மறையும் மேற்கினிலே
மணக்க வந்து காப்பாயே வடக்கிலும் காத்து வளந்தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில் மேல் கீழ் ஆகாயம்
நீயே செல்வம் தனைத்தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய் நெற்றியோடு
வாயைப் புருவ நடுவினையும் வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்.

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா; பற்கள்
மின்னும் நாகராசாவே விரைந்து காப்பாய் முகங்கழுத்தும்
இன்னல் தீர்க்கும் எழில் கோவே இதமாய் காப்பாய் தோள், கைகள்
மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்.

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இலையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் காப்பாய் நீ நீள்தொடை முழந்தாள் ஆடுசதை
மலையே கால்நகம் கனைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாய் காப்பாயே!

எங்கள் உரோமம் நரம்பினையும் எலும்பு தசைகள் ரத்தம் தும்
திங்கள் ரவி உள்ளவரைத் தினமும் காப்பாய் இரவு பகல்
மங்கும் நேரம் மலர் நேரம் மருளும் நேரம் மகில்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே! அரவத் தேவே காப்பாயே!

எட்டுத் திசையிலும் காப்பாயே எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள் தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப் போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே விடங்கள் ஏறா தருள்வாயே!

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகர்க்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்ற்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணிய தெல்லாம் ஈமக்கீந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய சுப்பிரமணியனிவன் செந்சொல் கவசம் தினம் சொன்னால்
நல்ல புத்திர பேறு தரும் நாக தோஷம் நீங்கி விடும்
இல்லற சுகமும் இயைந்து வரும் எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன வெல்லாம் கைகூடும் வாழ்வு வளமும் பெருகிவிடும்.



 ஒன்பது நாகங்களின் துதி பாடல்.

ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி

ஸர்வத்ர விஜயூபவேத்