31 December 2014

எண்கணிதம் ( numerology ) எப்படி வேலை செய்கிறது?


அன்புள்ள நண்பர்களே!

ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதில் கணக்கில் அடங்கா  பலன் கூறும் வழி முறைகள் உள்ளது. மிகவும் புராதன காலம் தொட்டே ஜோதிடம் மற்றும் வானவியல் சாஸ்திரங்கள் உள்ளது. 
நியூமராலஜி

   ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் பொது உள்ள கிரக நிலைகளை வைத்து நம்முடைய வாழ்வில் நடைபெறும் பலாபலன்களை கூறும் ஒருகலையாகும். இந்த ஜோதிட அறிவியலை நமது பழங்கால ஞானிகளும் சித்தமகா முனிவர்களும் வழிவழியாக அறிந்து வைத்து இருந்தார்கள். அதன் ஒரு பிரிவாக 'சப்த ஒலி சாஸ்திரம்' இருந்து வருகிறது.
 க்ளிக் செய்க...
     அந்த சப்த ஒலி சாஸ்திரங்களே, இன்றைய நியுமராலாஜி எனும் எண்கணிதம் என்ற பெயரில், உலகம் முழுதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுகின்றது.அதிர்ஷ்ட பெயர் மூலமாக ஒவ்வொருவரும் நல்ல அதிர்ஷ்டமான வாழ்வினை வாழமுடியும்.


    நீங்கள் செல்போன் கோபுரங்களை பார்த்து இருக்கிறீர்களா? நீங்கள் அதை பார்த்திருந்தாலும் பார்க்காவிட்டாலும், உங்களால் அதை புரிந்து கொள்ள முடிந்தாலும் இல்லையென்றாலும், உங்களிடம் செல்போன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது தன்னைசுற்றிலும் ஒரு அலைவரிசையினை அனுப்பிக்கொண்டே இருக்கும். அதனுடைய அலைவரிசையில் எங்களிடம் உள்ள தொலைபேசி எண்களின் அலைவரிசை ஒத்துப்போகும்போது அழைப்பு எங்கள் போனுக்கு வருகிறது. இல்லையேல் அது எந்த சலமும் இன்றி இருக்கிறது.

   அதுபோலத்தான் நீங்கள் இயற்கையின் சக்தியினை  பார்த்திருந்தாலும் பார்க்காவிட்டாலும், உங்களால் அதை புரிந்து கொள்ள முடிந்தாலும் இல்லையென்றாலும், உங்களிடம் பிரபஞ்சம் பற்றிய புரிதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது தன்னைசுற்றிலும் ஒரு அலைவரிசையினை அனுப்பிக்கொண்டே இருக்கும். உங்களுக்கான இயற்கையின் அழைப்புகள் உங்களை நிச்சயம் வந்து அடையும். அதனை சரியான படி பயன்படுத்துபவர்களே வாழ்க்கையில் சிறந்த நிலையினை அடைகிறார்கள். அதற்க்கான சரியான வழியினை காட்டி, வாழ்க்கையினை எளிமை படுத்துவதே எண்கணிதத்தின் தலையாய பணியாகும். 

   அந்த வகையில் எமது ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம் மூலம் பலன் பெற்ற பல்லாயிரக்கணக்கான அன்பர்களின் மூலம் யாம் பெற்ற அனுபவங்களை மக்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன். நன்றியுடன்
VV.பொன்தாமரைக்கண்ணன்

No comments:

Post a Comment