05 December 2014

கார்த்திகை தீப திருநாள் மகிமை பெருமை வரலாறு

ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை
வாவென்றழைக்கு மலை அண்ணாமலை
- குரு நமச்சிவாயர்
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.
பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:-
1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
2. நீர்- திருவானைக் காவல்
3. நெருப்பு- திருவண்ணாமலை
4. வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.
சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். 

தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீபவழிபாடு' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.தீபவழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் ஆகும்."இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான்தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

''அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகிஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்குஞானத் தமிழ் புரிந்த நான் ''என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவதுஇன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வரமண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.மாணிக்கவாசகர், ''சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" என்று சிவபெருமானைக்குறித்துப் பாடியுள்ளார்.குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்றுஅழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது.வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை டாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:''விளக்கொளியாகிய மின் கொடியாளைவிளக்கொளியாக விளங்கிடு நீயே !விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !-- என்று சிறப்பித்துக் கூறுகிறார்.''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்டதலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று கார்நாற்பது கூறுகிறது.நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல்அழகுடையவளாய் என்பது பொருள்.இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின்கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,
தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.
இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது
மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற
இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்
பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ''மகரஜோதி'' தரிசனம் கேரளத்தில்
மிகவும் பிரசித்தம்.

ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.
ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப்
பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி" ஆகும்.

திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில்
தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.

கார்த்திகைப் பௌர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்ää
சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.

இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்
சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்
கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன்
மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.

அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும்
தீப ஒளியை தரிசனம் செயவர்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்
முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக
சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்
சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனை
ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ''வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்'' என்று கார்த்திகையில் ஏற்றிய
விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கிää ஞான ஒளியை நம்முள் பெருக்க
உகந்த விழா கும்.

பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெறää கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுதுää முற்பிறவியில் செய்த பாவங்களைப்
போக்கி நன்மை அடைவோம். - See more at: http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_54.html#sthash.mbqPkvwD.dpuf
கார்த்திகைத் தீபம் :-திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்றுகார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீபவழிபாடு' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.தீபவழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் ஆகும்."இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான்தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.''அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகிஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்குஞானத் தமிழ் புரிந்த நான் ''என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவதுஇன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வரமண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.மாணிக்கவாசகர், ''சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" என்று சிவபெருமானைக்குறித்துப் பாடியுள்ளார்.குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்றுஅழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது.வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை டாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:''விளக்கொளியாகிய மின் கொடியாளைவிளக்கொளியாக விளங்கிடு நீயே !விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !-- என்று சிறப்பித்துக் கூறுகிறார்.''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்டதலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று கார்நாற்பது கூறுகிறது.நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல்அழகுடையவளாய் என்பது பொருள்.இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின்கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,
தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.
இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது
மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற
இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்
பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ''மகரஜோதி'' தரிசனம் கேரளத்தில்
மிகவும் பிரசித்தம்.

ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.
ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப்
பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி" ஆகும்.

திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில்
தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.

கார்த்திகைப் பௌர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்ää
சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.

இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்
சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்
கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன்
மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.

அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும்
தீப ஒளியை தரிசனம் செயவர்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்
முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக
சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்
சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனை
ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ''வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்'' என்று கார்த்திகையில் ஏற்றிய
விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கிää ஞான ஒளியை நம்முள் பெருக்க
உகந்த விழா கும்.

பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெறää கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுதுää முற்பிறவியில் செய்த பாவங்களைப்
போக்கி நன்மை அடைவோம். - See more at: http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_54.html#sthash.mbqPkvwD.dpuf

No comments:

Post a Comment