22 December 2014

உங்களின் ஜாதகப்படி நீங்கள் பிறந்த யோகத்தின் பலன் என்ன?

நீங்கள் பிறந்த நாளின் யோகம் என்ன?

சூரியனின் கதியினை இரண்டாக பிரித்து தை முதல் ஆனி முடிய உத்திராயணம் எனவும், ஆடி முதல் மார்கழி முடிய தக்ஷிணாயனம் எனவும் பிரித்து அறிகின்றோம். உத்திராயணம் காலமாகிய ஆறு மாதங்கள், என்பது தேவர்களுக்கு ஒருநாளின் பகல் பொழுதாகவும், தக்ஷிணாயன காலமாகிய ஆறு மாதங்கள் தேவர்களின் ஒருநாளைய இரவு பொழுதாகவும் அமைவதாக ஜோதிட சாஸ்த்திர காலநிர்ணய சூத்திரம் கூறுகிறது. 

இதே போல உத்திராயணம் திருஓணம் நட்சத்திரத்திலேயும், தட்சிணாயனம் பூசம் நட்சத்திரதிலேயும் தொடங்கும். இந்த நட்சத்திரங்களில் இருந்து சூரியன் சந்திரன் ஆகியோரின் கதியினை வைத்து கணக்கிட்டு அதற்க்கு யோகம் என பெயரிட்டு உள்ளார்கள்.


தினசரி நாட்காட்டியில் குறித்திருக்கும், அமிர்த யோகம், சித்த யோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்பது வேறு. இந்த யோகம் என்பது வேறு. இது வேறு. நட்சத்திரங்களில் இருந்து இருக்கும் தூரத்தினை வைத்து கணக்கிடுவதே இந்த யோகம் ஆகும். இதனை 27 பாகமாக கணக்கிட்டு ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக பெயரிட்டும் தனித்தனியாக பலன்களையும் நமது ஜோதிட ஞானிகள் கூறியுள்ளார்கள்.



நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ள உங்களின் ஜாதகத்தினை எடுத்து பிறக்கும் பொது இருந்த பஞ்சாங்க குறிப்பினை பார்க்கவும். அல்லது, கீழே உள்ள குறிப்பினை க்ளிக் செய்க
இலவச ஜாதக குறிப்பு பெற விபரம் 

நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளகீழே உள்ள இணைப்பினை கொண்டு உங்கள் யோகத்திற்க்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.



  1. விஷ்கம்பம் யோகம்: செல்க
  2. பிரீதி யோகம்: செல்க
  3. ஆயுஷ்மான் யோகம்: செல்க
  4. சௌபாக்கியம் யோகம்: செல்க
  5. சோபனம் யோகம்: செல்க
  6. அதிகண்டம் யோகம்: செல்க
  7. சுகர்மம் யோகம்: செல்க
  8. திருதி யோகம்: செல்க
  9. சூலம் யோகம்: செல்க
  10. கண்டம் யோகம்: செல்க
  11. விருத்தி யோகம்: செல்க
  12. துருவம் யோகம்: செல்க
  13. வியாகதம் யோகம்: செல்க
  14. அரிஷனம் யோகம்: செல்க
  15. வச்சிரம் யோகம்: செல்க
  16. சித்தி யோகம்: செல்க
  17. வியதீபாதம் யோகம்: செல்க
  18. வரியான் யோகம்: செல்க
  19. பரீகம் யோகம்: செல்க
  20. சிவம் யோகம்: செல்க
  21. சித்தம் யோகம்: செல்க
  22. சாத்தியம் யோகம்: செல்க
  23. சுபம் யோகம்: செல்க
  24. சுப்பிரம் யோகம்: செல்க
  25. பிரம்மம் யோகம்: செல்க
  26. அஜந்திரம் யோகம்: செல்க
  27. வைகிருதி யோகம்: செல்க



No comments:

Post a Comment