31 December 2014

jothidam jathagam tamil astrology Astrology palan Jathagam jathaga palan jathaga kanippu

முக்கியமான இணைப்புகள்:

எண்கணிதம் ( numerology ) எப்படி வேலை செய்கிறது?

அன்புள்ள நண்பர்களே!

ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதில் கணக்கில் அடங்கா  பலன் கூறும் வழி முறைகள் உள்ளது. மிகவும் புராதன காலம் தொட்டே ஜோதிடம் மற்றும் வானவியல் சாஸ்திரங்கள் உள்ளது. 
நியூமராலஜி

   ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் பொது உள்ள கிரக நிலைகளை வைத்து நம்முடைய வாழ்வில் நடைபெறும் பலாபலன்களை கூறும் ஒருகலையாகும். இந்த ஜோதிட அறிவியலை நமது பழங்கால ஞானிகளும் சித்தமகா முனிவர்களும் வழிவழியாக அறிந்து வைத்து இருந்தார்கள். அதன் ஒரு பிரிவாக 'சப்த ஒலி சாஸ்திரம்' இருந்து வருகிறது.
 க்ளிக் செய்க...
     அந்த சப்த ஒலி சாஸ்திரங்களே, இன்றைய நியுமராலாஜி எனும் எண்கணிதம் என்ற பெயரில், உலகம் முழுதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுகின்றது.அதிர்ஷ்ட பெயர் மூலமாக ஒவ்வொருவரும் நல்ல அதிர்ஷ்டமான வாழ்வினை வாழமுடியும்.

    நீங்கள் செல்போன் கோபுரங்களை பார்த்து இருக்கிறீர்களா? நீங்கள் அதை பார்த்திருந்தாலும் பார்க்காவிட்டாலும், உங்களால் அதை புரிந்து கொள்ள முடிந்தாலும் இல்லையென்றாலும், உங்களிடம் செல்போன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது தன்னைசுற்றிலும் ஒரு அலைவரிசையினை அனுப்பிக்கொண்டே இருக்கும். அதனுடைய அலைவரிசையில் எங்களிடம் உள்ள தொலைபேசி எண்களின் அலைவரிசை ஒத்துப்போகும்போது அழைப்பு எங்கள் போனுக்கு வருகிறது. இல்லையேல் அது எந்த சலமும் இன்றி இருக்கிறது.

   அதுபோலத்தான் நீங்கள் இயற்கையின் சக்தியினை  பார்த்திருந்தாலும் பார்க்காவிட்டாலும், உங்களால் அதை புரிந்து கொள்ள முடிந்தாலும் இல்லையென்றாலும், உங்களிடம் பிரபஞ்சம் பற்றிய புரிதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது தன்னைசுற்றிலும் ஒரு அலைவரிசையினை அனுப்பிக்கொண்டே இருக்கும். உங்களுக்கான இயற்கையின் அழைப்புகள் உங்களை நிச்சயம் வந்து அடையும். அதனை சரியான படி பயன்படுத்துபவர்களே வாழ்க்கையில் சிறந்த நிலையினை அடைகிறார்கள். அதற்க்கான சரியான வழியினை காட்டி, வாழ்க்கையினை எளிமை படுத்துவதே எண்கணிதத்தின் தலையாய பணியாகும். 

   அந்த வகையில் எமது ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம் மூலம் பலன் பெற்ற பல்லாயிரக்கணக்கான அன்பர்களின் மூலம் யாம் பெற்ற அனுபவங்களை மக்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன். நன்றியுடன்
VV.பொன்தாமரைக்கண்ணன்

28 December 2014

வாஸ்து சாஸ்த்திர படி மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது எப்படி?

வாஸ்து சாஸ்த்திர படி மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் முறை

நீர், நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. நீரின்றி நீரின்றி அமையாது உலகு என்ற படியாக, நாம் பல வழிகளில் நீரினை பயன்படுத்துகிறோம். பயன்படுத்தும் உரிமையுள்ள நமக்கு நீரினை சேமிக்கும் கடமையும் உள்ளது. முதலில் நாம் பயன் படுத்தும் நீரினை சிக்கனமாக பயன்படுத்த பலகை வேண்டும். பின்னல் வீணாகின்ற மலை நீரினை சேகரிக்க வேண்டும். அப்படி நீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் / கட்டடத்திலும் கட்டாயம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி (Rain Water Harvesting) அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் இதை எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.

  Ø மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்குப் பக்கம் அமைக்கலாம்.

Ø  மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் கிழக்குப் பக்கம் அமைக்கலாம்.

Ø  இவ்வாறு அமைக்கப்படும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி, தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.

Ø  கண்டிப்பாகத் தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை, தெற்கு மற்றும் மேற்கு நடுப் பகுதியில் அமைக்கக் கூடாது.

27 December 2014

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.

  • அவிட்டம்சதயம்,பூரட்டாதிஉத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
  • ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
  • கார்த்திகைஉத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
  • மிருகசீருஷம்சித்திரைபுணர்பூசம்,விசாகம்உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அது என்ன அடைப்பு? அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும். 

நன்றி ஆன்மீக பெரியோர்கள்.

23 December 2014

வாஸ்த்து எப்படி செயல் படுகிறது? ஒரு அறிவியல் ரீதியான விளக்கம்

how it works to vastu. A scientific explanation

நமக்கு, இரவும் பகலும் சூரியன் மறைவதாலோ அல்லது உதிப்பதலோ நிகழ்வதில்லை என்பதும், பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால் நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்படும் விளைவுகளே நமக்கு பகல் இரவு என்பதனை அறிந்து இருப்போம்.

பூமி, தன்னத்தானே சுற்றிக்கொண்டும், கூடவே சூரியனையும் 23டிகிரி சாய்ந்த அச்சில், சுற்றிகொண்டிருக்கும் போது வட கிழக்கிலிருந்து, தென் மேற்கு திசையை நோக்கி காந்த விசைகளும், காற்றின் விசையும் செயல்படும். ஒன்று  மைய நோக்கு விசை மற்றொன்று  மையவிலக்கு விசை. இந்த இரண்டு விசைகளுக்கும் நடுவில் ஏதேனும் தடுப்புஏற்பட்டால் அதுவே வாஸ்து குறை என்பதாகும். இது நம் உடலுக்கும் உணர்விற்கும் நிச்சயம் பாதிப்பை  விளைவிக்கும். இவைகள் நாளடைவில், நமது நல்ல எண்ணங்களை மாற்றி அதன் விளைவாக மிகவும் துன்பமான நிலைக்கு படிப்படியாக தள்ளப்படுகிறோம். 

வஸ்து சாஸ்த்திரம் என்பதே உண்மையான வார்த்தை. இதிலிருந்தே வாஸ்த்து என்பது மருவிய வார்த்தை தோன்றியிருக்கலாம். ஒரு பொருளினை (வஸ்துவினை) இயற்கையின் சக்த்திக்கு ஏற்ப எப்படி பயன் படுத்தலாம், என்பதனை தெளிவாக்கும் கலையே வாஸ்த்து சாஸ்த்திரம் ஆகும்.

இதனால்,
வாஸ்த்து என்பதுவும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியின் படி சரியானதாகவே இருக்கிறது. சரியான வாஸ்த்து பலம் கொண்ட கட்டிட அமைப்புகள் கொண்ட இடத்தில் நல்ல காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் மிகவும் அதிகமாக இருப்பதனையும், தீய அதிர்வலைகளும் உண்டாகிறது, என்பதனை தற்போதைய அறிவியல் கண்டு பிடிப்பான கிர்லியான் புகைப்படம், மூலம் நிரூபித்து உள்ளார்கள். 

22 December 2014

உங்களின் ஜாதகப்படி நீங்கள் பிறந்த யோகத்தின் பலன் என்ன?

நீங்கள் பிறந்த நாளின் யோகம் என்ன?

சூரியனின் கதியினை இரண்டாக பிரித்து தை முதல் ஆனி முடிய உத்திராயணம் எனவும், ஆடி முதல் மார்கழி முடிய தக்ஷிணாயனம் எனவும் பிரித்து அறிகின்றோம். உத்திராயணம் காலமாகிய ஆறு மாதங்கள், என்பது தேவர்களுக்கு ஒருநாளின் பகல் பொழுதாகவும், தக்ஷிணாயன காலமாகிய ஆறு மாதங்கள் தேவர்களின் ஒருநாளைய இரவு பொழுதாகவும் அமைவதாக ஜோதிட சாஸ்த்திர காலநிர்ணய சூத்திரம் கூறுகிறது. 

இதே போல உத்திராயணம் திருஓணம் நட்சத்திரத்திலேயும், தட்சிணாயனம் பூசம் நட்சத்திரதிலேயும் தொடங்கும். இந்த நட்சத்திரங்களில் இருந்து சூரியன் சந்திரன் ஆகியோரின் கதியினை வைத்து கணக்கிட்டு அதற்க்கு யோகம் என பெயரிட்டு உள்ளார்கள்.

தினசரி நாட்காட்டியில் குறித்திருக்கும், அமிர்த யோகம், சித்த யோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்பது வேறு. இந்த யோகம் என்பது வேறு. இது வேறு. நட்சத்திரங்களில் இருந்து இருக்கும் தூரத்தினை வைத்து கணக்கிடுவதே இந்த யோகம் ஆகும். இதனை 27 பாகமாக கணக்கிட்டு ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக பெயரிட்டும் தனித்தனியாக பலன்களையும் நமது ஜோதிட ஞானிகள் கூறியுள்ளார்கள்.

நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ள உங்களின் ஜாதகத்தினை எடுத்து பிறக்கும் பொது இருந்த பஞ்சாங்க குறிப்பினை பார்க்கவும். அல்லது, கீழே உள்ள குறிப்பினை க்ளிக் செய்க
இலவச ஜாதக குறிப்பு பெற விபரம் 

நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளகீழே உள்ள இணைப்பினை கொண்டு உங்கள் யோகத்திற்க்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  1. விஷ்கம்பம் யோகம்: செல்க
  2. பிரீதி யோகம்: செல்க
  3. ஆயுஷ்மான் யோகம்: செல்க
  4. சௌபாக்கியம் யோகம்: செல்க
  5. சோபனம் யோகம்: செல்க
  6. அதிகண்டம் யோகம்: செல்க
  7. சுகர்மம் யோகம்: செல்க
  8. திருதி யோகம்: செல்க
  9. சூலம் யோகம்: செல்க
  10. கண்டம் யோகம்: செல்க
  11. விருத்தி யோகம்: செல்க
  12. துருவம் யோகம்: செல்க
  13. வியாகதம் யோகம்: செல்க
  14. அரிஷனம் யோகம்: செல்க
  15. வச்சிரம் யோகம்: செல்க
  16. சித்தி யோகம்: செல்க
  17. வியதீபாதம் யோகம்: செல்க
  18. வரியான் யோகம்: செல்க
  19. பரீகம் யோகம்: செல்க
  20. சிவம் யோகம்: செல்க
  21. சித்தம் யோகம்: செல்க
  22. சாத்தியம் யோகம்: செல்க
  23. சுபம் யோகம்: செல்க
  24. சுப்பிரம் யோகம்: செல்க
  25. பிரம்மம் யோகம்: செல்க
  26. அஜந்திரம் யோகம்: செல்க
  27. வைகிருதி யோகம்: செல்க

11 December 2014

வைகிருதி யோகம் பலன்கள்

வைகிருதி யோகம்

தந்திரம் மிகுந்தவனாகவும், பிறரை தூஷிப்பதே வேலையாக கொண்டு ஆனந்தம் அடைவான். வலிமையினால் செல்வாக்கு பெற்று தனம் அடைவான்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

அஜந்திரம் யோகம் பலன்கள்

அஜந்திரம் யோகம்

சகலத்தினைப் பற்றியும் தெரிந்தவனாக ஞானியினை போல இருப்பான். தனம், பரோபகார சிந்தனையுடன் இருப்பான்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

பிரம்மம் யோகம் பலன்கள்

பிரம்மம் யோகம்

இரகசியமான செல்வங்களை கொள்பவனாக, தன்னுடைய முன்னேற்றமே முக்கியமானதாக கொள்ளும் குணத்துடன், நியாயமான முடிவுகளை எடுக்கும் குணமுடையோன்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சுப்பிரம் யோகம் பலன்கள்

சுப்பிரம் யோகம்

சாதுர்யமான பேச்சும், ஒழுக்கம் தவறாத நடத்தையும், கொண்டவனாக, மனோதிடம் இல்லாதவனாகவும், கோபம் மிகுந்தவனாகவும் இருப்பான்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சுபம் யோகம் பலன்கள்

சுபம் யோகம்

அழகும் செல்வமும் பெற்றவனாக, காம இச்சை மிகுந்தவனாகவும், கபம் நோய்கள் மிகுந்தவனாக இருப்பான்.

மேலும் யோக பலன்களை அறிய திறக்கவும்

சாத்தியம் யோகம் பலன்கள்

சாத்தியம் யோகம்

நல்லவழிகளை கண்டறிந்து தவறாமல் அந்த வழியில் நடக்கும் உத்தமன்.

மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சித்தம் யோகம் பலன்கள்

சித்தம் யோகம்

உத்தமமான போக்கினை உடையவராக, தெய்வீக ஈடுபாட்டுடன் இருப்பார்இருப்பார்கள்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சிவம் யோகம் பலன்கள்

சிவம் யோகம்

சாஸ்த்திரம் அறிந்தவனாகவும், செலவ செல்வாக்கினை பெற்றவானாக, சாந்த குணத்துடன் ஆட்சி செய்பவரிடம் மதிப்புள்ளவனாக இருப்பார்.
மேலும் யோக பலன்களை அறிய திறக்கவும்

பரீகம் யோகம் பலன்கள்

பரீகம் யோகம்

சண்டை போடும் குணம் அதிகம் இருக்கும். செல்வா சௌபாக்கியம் அதிகமாக சேரும்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

வரியான் யோகம் பலன்கள்

வரியான் யோகம்

கெட்ட வழியிலே நடக்க துநிந்தவராக இருப்பார்கள். க்கமவளியிலே போவதும் அதன் விளைவுகளை அனுபவிப்பார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

வியதீபாதம் யோகம் பலன்கள்

வியதீபாதம் யோகம்

எப்போதும் மோசமான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தும் குணத்துடன் வாழுவார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சித்தி யோகம் பலன்கள்

சித்தி யோகம்

மகாபிரபுவாக வாழுவர். பலருக்கு ஆதரவாக உதவி செய்து, பலரின் நன்றிக்கு உரியவராக, வசதியாக வாழுவர்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

வச்சிரம் யோகம் பலன்கள்

வச்சிரம் யோகம்

கம வெறி மிகுந்தவராகவும். தனவந்தரகவும் விளங்குவார். இரண்டு விதமான பெயர் பெருவார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

அரிஷனம் யோகம் பலன்கள்

அரிஷனம் யோகம்

புத்திசாலி தனம் மிக்கவராக, அதனால் பெரும் புகழ் அடைபவராக இருப்பார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

வியாகதம் யோகம் பலன்கள்

வியாகதம் யோகம்

கொடூரமான மனம் கொண்டவர். பேச்சிலும் செயலிலும் அது வெளிப்படும்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

துருவம் யோகம் பலன்கள்

துருவம் யோகம்
பெரும் செல்வ வளத்துடன் அமோகமாக வாழுவார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

விருத்தி யோகம் பலன்கள்

விருத்தி யோகம்

பேச்சிலே சாதுர்யம் மிக்கவராகவும், அதனால் பலவகையில் விருத்திகள் ஏற்ப்படும்.

மேலும் யோக பலன்களை அறிய திறக்கவும்

கண்டம் யோகம் பலன்கள்

கண்டம் யோகம்

தீய வழியில் மனம் செல்லும். அதிலே திருப்தி உண்டாகும். இதனால் பலவிதமான சிக்கல் ஏற்ப்படும்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சூலம் யோகம் பலன்கள்

சூலம் யோகம்

சிறு சிறு விசயங்களுக்கு கோபம், சதா சண்டை போட தயாரான குணமுடன், அதானால் வரும் விளைவுகளுடன் போரடுவார்.

மேலும் யோக பலன்களை அறிய திறக்கவும்

திருதி யோகம் பலன்கள்

திருதி யோகம்

பிறரின் பொருள்கள், பெண்களை அவருக்கு தெரியாமல் அபகரிக்கும் குணத்துடனும், இந்த புத்தியினால் பலருடைய வெறுப்புக்கு ஆளானவராக இருப்பார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

சுகர்மம் யோகம் பலன்கள்

சுகர்மம் யோகம்

உத்தமமான நடத்தை உள்ளவர். செல்வ வசதியுடன், நல்ல கர்மங்கள் செய்யும் குணத்துடன் இருப்பார்.

1.       மேலும் யோக பலன்களை அறிய திறக்கவும்

சோபனம் யோகம் பலன்கள்

சோபனம் யோகம்:

காம வெறி மிகுந்தவராக இருப்பவராகவும், அதனால் பல தொல்லைகளை அனுபவிப்பவரகவும் இருப்பார்.

மேலும் யோக பலன்களை அறிய திறக்கவும்

சௌபாக்கியம் யோகம் பலன்கள்

சௌபாக்கியம் யோகம் பலன்கள்

இவருக்கு எப்போதும் மகிழ்சியான வாழ்க்கை அமையும். அதற்க்கு வேண்டிய வசதி வாய்ப்பு அமையும்.

மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

ஆயுஷ்மான் யோகம் பலன்கள்

ஆயுஷ்மான் யோகம் பலன்கள்

நீண்ட ஆயுளையும் நோயற்ற உடலையும், பெற்றவராக வாழுவர்.

மேலும் யோக பலன்களை அறிய   திறக்கவும்

அதிகண்டம் யோகம் பலன்கள்

அதிகண்டம் யோகம்

கொடூரமான புத்தியுடையவராக, பிறரை துன்புறுத்தி தானும் துன்பத்துடன் வாழுவார்.
மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

பிரீதி யோகத்தில் பிறந்த பலன்

பிரீதி யோகம்: பிற பெண்களின் வசப்பட்டவராக, அவர்கள் சொல்கிற படி கேட்டு நடப்பவராக இருப்பார்.

மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

விஷ்கம்பம் யோகத்தில் பிறந்த பலன்

விஷ்கம்பம் யோகத்தில் பிறந்த பலன்

பிறரை வெற்றி கொள்ளக்கூடியவராகவும் செல்வங்களை அடையக்கூடியவரகவும் பசு முதலான கால்நடை செல்வம் மூலம் செல்வம் பெறுவார்கள்.

மேலும் யோக பலன்களை அறிய  திறக்கவும்

10 December 2014

நீங்கள் பிறந்த நாளின் யோகம் என்ன?

நீங்கள் பிறந்த நாளின் யோகம் என்ன?

சூரியனின் கதியினை இரண்டாக பிரித்து தை முதல் ஆனி முடிய உத்திராயணம் எனவும், ஆடி முதல் மார்கழி முடிய தக்ஷிணாயனம் எனவும் பிரித்து அறிகின்றோம். உத்திராயணம் காலமாகிய ஆறு மாதங்கள், என்பது தேவர்களுக்கு ஒருநாளின் பகல் பொழுதாகவும், தக்ஷிணாயன காலமாகிய ஆறு மாதங்கள் தேவர்களின் ஒருநாளைய இரவு பொழுதாகவும் அமைவதாக ஜோதிட சாஸ்த்திர காலநிர்ணய சூத்திரம் கூறுகிறது. 

இதே போல உத்திராயணம் திருஓணம் நட்சத்திரத்திலேயும், தட்சிணாயனம் பூசம் நட்சத்திரதிலேயும் தொடங்கும். இந்த நட்சத்திரங்களில் இருந்து சூரியன் சந்திரன் ஆகியோரின் கதியினை வைத்து கணக்கிட்டு அதற்க்கு யோகம் என பெயரிட்டு உள்ளார்கள்.

தினசரி நாட்காட்டியில் குறித்திருக்கும், அமிர்த யோகம், சித்த யோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்பது வேறு. இந்த யோகம் என்பது வேறு. இது வேறு. நட்சத்திரங்களில் இருந்து இருக்கும் தூரத்தினை வைத்து கணக்கிடுவதே இந்த யோகம் ஆகும். இதனை 27 பாகமாக கணக்கிட்டு ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக பெயரிட்டும் தனித்தனியாக பலன்களையும் நமது ஜோதிட ஞானிகள் கூறியுள்ளார்கள்.

நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ள உங்களின் ஜாதகத்தினை எடுத்து பிறக்கும் பொது இருந்த பஞ்சாங்க குறிப்பினை பார்க்கவும். அல்லது, கீழே உள்ள குறிப்பினை க்ளிக் செய்க
இலவச ஜாதக குறிப்பு பெற விபரம் 

நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளகீழே உள்ள இணைப்பினை கொண்டு உங்கள் யோகத்திற்க்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  1. விஷ்கம்பம் யோகம்: செல்க
  2. பிரீதி யோகம்: செல்க
  3. ஆயுஷ்மான் யோகம்: செல்க
  4. சௌபாக்கியம் யோகம்: செல்க
  5. சோபனம் யோகம்: செல்க
  6. அதிகண்டம் யோகம்: செல்க
  7. சுகர்மம் யோகம்: செல்க
  8. திருதி யோகம்: செல்க
  9. சூலம் யோகம்: செல்க
  10. கண்டம் யோகம்: செல்க
  11. விருத்தி யோகம்: செல்க
  12. துருவம் யோகம்: செல்க
  13. வியாகதம் யோகம்: செல்க
  14. அரிஷனம் யோகம்: செல்க
  15. வச்சிரம் யோகம்: செல்க
  16. சித்தி யோகம்: செல்க
  17. வியதீபாதம் யோகம்: செல்க
  18. வரியான் யோகம்: செல்க
  19. பரீகம் யோகம்: செல்க
  20. சிவம் யோகம்: செல்க
  21. சித்தம் யோகம்: செல்க
  22. சாத்தியம் யோகம்: செல்க
  23. சுபம் யோகம்: செல்க
  24. சுப்பிரம் யோகம்: செல்க
  25. பிரம்மம் யோகம்: செல்க
  26. அஜந்திரம் யோகம்: செல்க
  27. வைகிருதி யோகம்: செல்க

09 December 2014

நன்றி நன்றி நன்றி

ஸ்ரீ ராம் ஜோதிட ஆராய்சி மையம் மூலம் நடத்தப்பெறும், இந்த வலைபூவினை நான்கு ஆயிரம் பார்வையாளர்களை தாண்ட வைத்த அன்பர்களுக்கும்  பார்வையிட்டு பயன் அடையும் அனைவருக்கும், எங்களின் ஜோதிட நிலையத்தின் சார்பாக எண்களின் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன்.
எங்களின் குலதெய்வமான ஸ்ரீ ராமலிங்க சௌடேஷ்வரி அம்மனின் அருள் கடாக்ஷம் நம் அனைவரையும், நல்வழி படுத்தும், 
ஸ்ரீ ராமலிங்க சௌடேஷ்வரி
எந்தன் நாவில் குடிகொண்ட சரஸ்வதி தேவியின் காலடி பணிந்து, வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி தேவியினை வேண்டிக்கொண்டு அன்பர்களுக்கு நன்றி கூறுகிறேன். 
நன்றி நன்றி நன்றி...

05 December 2014

கார்த்திகை தீப திருநாள் மகிமை பெருமை வரலாறு

ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை
வாவென்றழைக்கு மலை அண்ணாமலை
- குரு நமச்சிவாயர்
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.
பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:-
1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
2. நீர்- திருவானைக் காவல்
3. நெருப்பு- திருவண்ணாமலை
4. வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.
சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். 

தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீபவழிபாடு' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.தீபவழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் ஆகும்."இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான்தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

''அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகிஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்குஞானத் தமிழ் புரிந்த நான் ''என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவதுஇன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வரமண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.மாணிக்கவாசகர், ''சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" என்று சிவபெருமானைக்குறித்துப் பாடியுள்ளார்.குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்றுஅழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது.வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை டாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:''விளக்கொளியாகிய மின் கொடியாளைவிளக்கொளியாக விளங்கிடு நீயே !விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !-- என்று சிறப்பித்துக் கூறுகிறார்.''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்டதலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று கார்நாற்பது கூறுகிறது.நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல்அழகுடையவளாய் என்பது பொருள்.இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின்கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,
தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.
இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது
மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற
இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்
பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ''மகரஜோதி'' தரிசனம் கேரளத்தில்
மிகவும் பிரசித்தம்.

ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.
ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப்
பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி" ஆகும்.

திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில்
தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.

கார்த்திகைப் பௌர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்ää
சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.

இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்
சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்
கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன்
மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.

அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும்
தீப ஒளியை தரிசனம் செயவர்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்
முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக
சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்
சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனை
ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ''வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்'' என்று கார்த்திகையில் ஏற்றிய
விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கிää ஞான ஒளியை நம்முள் பெருக்க
உகந்த விழா கும்.

பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெறää கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுதுää முற்பிறவியில் செய்த பாவங்களைப்
போக்கி நன்மை அடைவோம். - See more at: http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_54.html#sthash.mbqPkvwD.dpuf
கார்த்திகைத் தீபம் :-திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்றுகார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீபவழிபாடு' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.தீபவழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் ஆகும்."இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான்தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.''அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகிஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்குஞானத் தமிழ் புரிந்த நான் ''என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவதுஇன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வரமண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.மாணிக்கவாசகர், ''சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" என்று சிவபெருமானைக்குறித்துப் பாடியுள்ளார்.குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்றுஅழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது.வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை டாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:''விளக்கொளியாகிய மின் கொடியாளைவிளக்கொளியாக விளங்கிடு நீயே !விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !-- என்று சிறப்பித்துக் கூறுகிறார்.''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்டதலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று கார்நாற்பது கூறுகிறது.நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல்அழகுடையவளாய் என்பது பொருள்.இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின்கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,
தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.
இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது
மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற
இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்
பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ''மகரஜோதி'' தரிசனம் கேரளத்தில்
மிகவும் பிரசித்தம்.

ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.
ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப்
பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி" ஆகும்.

திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில்
தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.

கார்த்திகைப் பௌர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்ää
சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.

இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்
சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்
கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன்
மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.

அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும்
தீப ஒளியை தரிசனம் செயவர்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்
முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக
சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்
சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனை
ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ''வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்'' என்று கார்த்திகையில் ஏற்றிய
விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கிää ஞான ஒளியை நம்முள் பெருக்க
உகந்த விழா கும்.

பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெறää கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுதுää முற்பிறவியில் செய்த பாவங்களைப்
போக்கி நன்மை அடைவோம். - See more at: http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_54.html#sthash.mbqPkvwD.dpuf

04 December 2014

கிரக மாலிகா யோகம் ( graka malika yogam )

கிரக மாலிகா யோகம்
      ஜாதக அலங்காரம் எனும் நூல் கிரக மாலிகா யோகத்தினைப்பற்றி விரிவாக கூறுகிறது.  மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். எனவே இந்த யோகத்தினை கிரக மாலை யோகம் என பொருள் கொள்ளலாம். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.

மேலே எழுதியுள்ள வரிசைப்படி என்று மட்டும் இல்லை, வேறு விதமான வரிசையில் கூட கிரகங்கள் இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். வரிசையில் கிரகம் இருந்தால் அது மாலையோகம் எனப்படும். ஜாதக ராசி நிலையினை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். 

லக்கினம் முதல் ஏழு வீடுகளில் கிரகம் (அரியோகம்)

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான். நன்மைகளை உடையவன், மிகுந்த நீதிமான், அறிவுடைய தலைவன், தான் குலத்திலே விசேசமானவன், நிலைத்த யோகம் உடையவன், என ஜாதக அலங்காரம் கூறுகிறது.

லக்கினம் முதல் ஆறு வீடுகளில் ஏழு கிரகம். (சாதாமினியோகம்)

இந்த அமைப்புள்ள ஜாதகன், அரச தகுதி உள்ளவன். நோயற்ற சுக போக சரீரம் உள்ளவன், செல்வந்தன், இசை ஞானம், புத்தியுள்ளவன், நீதிமன், என்று புகழப்படுவான்.

லக்கினம் முதல் ஐந்து வீடுகளில் ஏழு கிரகம் (பாச யோகம்)

இந்த அமைப்புள்ள ஜாதகன், அறிவு மிக்கவனாகவும், மொழியில் புலமை பெற்றவனாகவும், தன்னுடைய செயலை சிறப்பாக செய்பவன், சிறந்த விரிவுரையாளன், அரசனால் புகழ் பெறுபவன் என ஜாதக அலங்காரம் கூறுகிறது.

லக்கினம் முதல் நான்கு வீடுகளில் ஏழு கிரகம். (கேதார யோகம்)

இந்த அமைப்புள்ள சாதகர்கள், விவசாயம் செய்து செல்வம் அடைவார்கள். தனது உறவினர்களிடம் அன்பு செய்வார்கள். நல்ல சுக ஜீவனம் உடையவராக, அரச சன்மானம் பெறுவார். 

லக்கினம் முதல் மூன்று வீடுகளில் ஏழு கிரகம் (சூல யோகம்)

இந்த அமைப்புள்ள ஜாதகர் சிறந்த வித்தை கற்றவனாகவும். உற்ச்சாகம் மிக்கவன், சிறந்த வியாபாரி, பொன் பொருள் சேர்ப்பவன், லாபம் பெறுவதில் நிகர் இல்லாதவன், தனது திசா புத்திகளில் நன்மை தீமை அடைபவன், எனவும் ஜாதக அலங்காரம் நூல் கூறுகிறது.

லக்கினம் மற்றும் இரண்டாம் வீடுகளில் ஏழு கிரகம். (நீளகயோகம்)
அந்த அமைப்புள்ள ஜாதகன், பெரியோர்களை பணிந்து அவர்களிட விசயங்களை சாதிக்கும் ஆற்றல் பெற்றவன், நிறைந்த ஆயுள் உடையவன், சுற்றத்தாருக்கு அதிக நன்மை செய்பவன்,நீதிமான் என ஜாதக அலங்காரம் கூறுகிறது.

லக்கினத்தில் ஏழு கிரகங்கள் (கெவுள யோகம்)

இந்த அமைப்பில் பிறந்தவன், எந்த விதமான செல்வமும் இல்லாதவனாகவும்,அரை உடம்பாக இழைத்தும் சோம்பேறியாகவும் இருப்பான், தரித்திற யோகம் இது. சிற்பகலையில் வல்லவனாக சதா ஊர் சுற்றி திரிவான் என இந்த அற்புதமான நூல் கூறுகிறது

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக அனுப்புங்கள்