நெருப்பு , பகை, கடன் ஆகியவைகளை மிச்சம் வைக்க கூடாது அப்படி வைத்தால் அது அவர்களது கழுத்தை நெரிக்கும் என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடன் பெற்றார் நெஞ்சம் போல்கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்றுகடன் பெற்றவர்களின் நிலையை கம்பர் இலக்கிய நயத்துடன், தனது இலக்கியத்தில் சொல்லியிருப்பார்.
கேள்வி :சரி ஜாதக ரீதியாக மீள கடனில் மூழ்கிவிடும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் என்ன செய்தால் கடனில் இருந்து மீண்டு நல வாழ்வினை பெற முடியும் ?
இதற்க்கு சரியான வழி என்ன ? மேலும் பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவு பெறுவது எப்படி ? இதற்க்கு ஜோதிட ரீதியான தீர்வுதான் என்ன ? ஜோதிடம் இந்த சிரமத்தில் இருந்து விடுபட வழி காட்டுகிறதா ?
பதில்: நிச்சயம் இருக்கிறது.
கடன்களை கட்டுவதற்காகவே, பிரத்தியேகமாக ஒரு முகூர்த்த காலம் ஒன்று உள்ளது. அதனை மைத்ரமுகூர்தம் என குறிப்பிடுவார்கள். இந்தநாளில் தீர்க்க முடியாது என தடுமாறும் கடனுக்கான அசலில் இருந்து, ஒரு சிறுதொகையை காட்டும்போது மீதியுள்ள கடனும் மெல்ல மெல்ல தீர்வுக்கு வரும்.முயற்சித்து பார்க்கவும்.
No comments:
Post a Comment