வாஸ்த்து சாஸ்திரத்தில் உட்பிரிவுகளாக பலப்பல விதிமுறைகள் இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் அதன் அடிப்படையினை தெரிந்து கொண்டு இருப்பது அவசியம் ஆகும். வீட்டில் ஏற்படும் பலவிதமான வாஸ்த்து தோஷங்களுக்கு காரணம் நமக்கு அதன் அடிப்படை விசயங்கள் கூட தெரியாமல் இருப்பதே ஆகும். பெரும்பாலும் வாஸ்த்துக் குற்றங்கள் ஏற்படும் இடம் வீட்டின் தலை வாசல் என கூறப்படும், நாம் வீட்டின் உள்ளே வரும் காந்த ஆற்றலின் வழியினை சரியானமுறையில் அமைத்துக் கொள்லாததே ஆகும். அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்வு வாழ உறுதியளிக்கும், முதல் வாஸ்த்து பலம், ஒரு வீட்டின் வாசலே ஆகும். அதனை சரியான முறையில் அமைத்து கொண்டாலே அற்புதமான முறையில் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
பொதுவாகவே நமக்கு வீட்டின் கிழக்கு திசை என்பதும், வடக்கு திசை என்பதும், மிகவும் முக்கியமானதாகும். இதை மையமாக வைத்து நாம் வாசல் வைக்கும் சூட்சுமத்தினைபுரிந்து கொள்ள பார்ப்போம். வீட்டின் நான்கு பக்கவாட்டு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியினை உச்சம் என குறிப்பிடுவார்கள். இந்த திசைகளில் இயற்கையின் காந்த ஆற்றல் மிக அதிகமாக குவியும். அதே போல தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளை நீச்சம் எனகுறிப்பிடுவார்கள். இந்த திசைகளிலே காந்த சக்தியானது உயிர் ஆற்றலினை குறைவாக கொண்டு இருக்கும். இதனை போலவே இரண்டு திசைகளுக்கு சரி பாதியில் உள்ள இடத்தினை சமம் என குறிப்பிடுவர்கள். (மனையடி சாஸ்த்திரத்தின் படி இந்த பகுதியினையே சிறப்பாக கூறுகிறார்கள்) இந்த இடங்களில் காந்தசக்தியானது, சரியான முறையில் சமமாக பரவி நிற்கும். இதை வைத்தே நாம் நம்முடைய வீட்டின் உச்சநீச்சங்களை தெரிந்து கொள்ள முடியும். இதனை இந்த படத்தினை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
|
ஸ்ரீராம் சக்தி மையம் |
|
கிழக்கு:
இந்த சுவற்றில் வடக்கு பகுதி +1௦௦ எனவும் தெற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது.இதில் நடுபாகமாகிய கிழக்கில் இருந்து வடக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
தெற்கு:
இந்த சுவற்றில் கிழக்கு பகுதி +1௦௦ எனவும் மேற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது. இதில் நடுபாகமாகிய தெற்கில் இருந்து கிழக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
மேற்கு:
இந்த சுவற்றில் வடக்கு பகுதி +1௦௦ எனவும் தெற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது. இதில் நடுபாகமாகிய மேற்கில் இருந்து வடக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
வடக்கு:
இந்த சுவற்றில் கிழக்கு பகுதி +1௦௦ எனவும் மேற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது. இதில் நடுபாகமாகிய வடக்கில் இருந்து கிழக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
இந்த முறையின் படி பார்க்கும் பொது, ஈசான்யம் பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு திசைகளிலும் உச்ச பலம் வருவதால், ஈசான்யம் மிகவும் புனிதமானதாக கருதப்பதுகிறது. மேலும் அதிகமான தகவலுக்கு உங்கள் ஜோதிடரை அணுகவும்.