25 August 2015

எண் கணிதம் விளக்கம் astro numerology

அஸ்ட்ரோ நியூமராலாஜி - எண் கணிதம் விளக்கம்.
      பெயர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் முழுவதும் அவரினை உலகத்துடன் இணைக்கிற முக்கியமான அடையாளம் ஆகும். பெயரின் உச்சரிப்பு என்பது ஒலி அலைவரிசைகளின் அதிர்வாகும். பொதுவாக ஒலி அலைகளின் மாறுபட்ட அதிர்வுகளின் தொகுப்பினையே நமது செவி மொழி என்ற வடிவில் உணர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழி மற்ற எல்லா மொழிகளையும் உள்ளடக்கி உலகத்தினையே ஆட்கொள்கிறது என்பது, அந்த மொழியின் பலமான அதிர்வலைகளின் தொகுப்பு மற்ற மொழிகளின் ஆகர்சன சக்தியினை விட அதிகமானது என்பதனை நாம் உணரவேண்டும். அந்த வகையில் உலகத்திற்கே பொது மொழியாக உள்ள ஆங்கில எழுத்துகளை மட்டுமே பயன் படுத்தி சப்தத்தின் நல்ல மற்றும் தீய விளைவுகளை கண்டறிவது பொருத்தமானதாகவே உள்ளது.


       நம்மை உலகத்தின் சக மனிதர்களுடன் இணைக்கும் நமது பெயரின் அதிர்வெண், நமது ஜாதக ரீதியாக நாம் பிறந்த தேதி எண், விதி எண், மற்றும் உயிர் எண்ணுடன் பொருந்தி போகும் போது, நம்மால் மிகவும் சிறப்பான முறையில் இயங்க முடிகிறது. அதனை இப்படி விளக்கலாம். போர்களத்திற்கு செல்லும் வீரனுக்கு அவனின் அசைவுகளை, போர்முறைகளை, வேகத்தினை தடுக்காத ஆடைகள், கவசங்கள், ஆயுதங்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது பெயரும் முக்கியமானது.

      ஒரு குழந்தை பிறந்து, அது வளரும் போதும் அல்லது வளர்ந்த பின்னரும் கூட பெற்றோர்கள் மட்டுமல்ல குடும்பத்தினை சேர்ந்த எந்த நபர்களும் குழந்தையினை இனிசியலுடன் சேர்த்து கூப்பிடுவது இல்லை. எனவே இனிசியல் இல்லாமலேயே முதலில் பெயரினை மட்டும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தை வளரும் பொது உச்சரிக்கும் அதிர்வலைகள் குழந்தைக்கு நன்மைகள் செய்யும். குழந்தைக்கு வைக்கும் பெயர் நீண்ட பெயராக இருக்கும் பட்சத்தில் செல்லமாக அந்த பெயரில் ஒரு பகுதியினை மட்டும் கூப்பிட முடிவு செய்யும் பொது, எண்கணித நிபுணரிடம் தக்க ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். முழு பெயர் எண்னின் அலைவரிசையினை கெடுக்கும் படியான பெயராக அது அமையுமானால், அது குழந்தைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

      படித்து வளர்ந்து பட்டங்கள் பெற்று, தொழில் அதிபராகவோ அல்லது உயர் பதவியிலோ இருக்கும் பொது நாம் நமது முழு பெயராலேயே அறியப்படுவோம். அப்போது நிறைய கையெழுத்து போடும் பொது இன்சியலுடன் உள்ள பெயரின் எழுத்துகளின் உண்டாகும் அதிர்வுகளின் தாக்கத்தினால் மீண்டும் நாம் மாறுபாடான பலன்களை அடையக்கூடும். எனவே இன்சியலுடனும், இல்லாமலும் மேலும் நமது கூப்பிடும் பெயரும் கூட ஒரே அலைவரிசையில் நட்பு அலைவரிசையில் இருக்குமாறு அமைத்து கொள்ளுங்கள். பெயர் மட்டுமே முழு பலன்களை தந்து விட முடியாது. அவரவர்களின் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து தான் பெயர் வைக்க வேண்டும். ஜாதக ரீதியாக மிகவும் கடினமான சூழலில் சிக்கிய அன்பர்கள் 100% எண்கணித முறையில் எளிமையான வாழ்க்கையினை அடையலாம். ஜாதக ரீதியாக தற்போது நல்ல சூழல் இருக்கும் அன்பர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தினை 100% தக்க வைத்து கொள்ள முடியும். மேலும், அதனை வாழ்நாள் முழுதும் தொடரவைக்க முடியும். 
   ஜோதிடம் எண்கணிதம், குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர், நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்னைகள், தோஷங்கள், ராசிக்கல் போன்ற அனைத்து விபரங்களுக்கும் அணுகவும். நேரில் வரமுடியாதவர்கள் Consultng Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment