நாம் வசிக்கும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் ஒளி மிகுந்த கிரகங்களும், நட்சத்திரங்களும் இருக்கிறது. கிரகங்கள் ஒன்பது என்றும், நட்சத்திர மண்டலங்களில் கிரகங்களின் பாதையில் உள்ள இருபத்தேழு மண்டலங்கள் என்றும், வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என ஏழு கிரகங்களும் நிழல் கிரகங்கள் எனப்படும், ராகு, கேது
சேர்த்து நவகிரகங்கள் எனப்படுகிறது.
சூரியனின் ஒரு சுற்று ஒரு வருட காலமும், சந்திரனின் ஒரு சுற்று இரண்டு பட்சங்கள் கொண்ட ஒரு மாதமாகவும் கணக்கிடப்படுகிறது. செவ்வாய் ஒரு சுற்று 18 மாதங்களாகும். புதன், சுக்கிரன், இவர்களின் சஞ்சாரம் ஒரு ஆண்டு ஆகும் சனியின் ஒரு சுற்று முப்பது வருட காலமாகும். குருவின் ஒரு சுற்று பன்னிரெண்டு வருடங்கள், ராகுவும், கேதுவும், ஒன்றரை வருட காலத்தில் ஒரு சுற்றை முடிப்பர். ஏழு கிரகங்களும் பிரதட்சிணமாக சுற்றி வரும் போது ராகுவும், கேதுவும் மட்டும் அப்ரதட்சிணமாக சுற்றி வருகிறார்கள்.
ராசி சக்கரத்தில் தனக்கென்று வீடு இல்லாமல் இருக்கும் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவிதமானவை. ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்று வசனம் உண்டு. இவ்விருவரும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் ராசியையும், அந்த ராசிநாதனையும் பொருத்தும், இவர்கள் எந்த கிரகங்களின் பார்வை பெறுகிறார்கள் என்பதை பொருத்தும் இவர்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. அனேகமாக நல்ல இடங்களில் அமையாவிடில் இவற்றால் அதிகக் கெடுதல்கள் ஏற்படுகிறது. சந்திரன் சூரியன் இவர்களை விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர். சந்திர, சூரியரையும், பலம் இழக்கும் படி, ஒளி இழக்கும்படி செய்ய இவர்களுக்கு ஆற்றல் உண்டு.
ராகு கேது தோஷம் உடையவர்கள், மிகவும் கடுமையான பலன்களை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். விவாக தாமதம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவற்றுக்கு காரணமாக இருக்கிறார்கள். மேலும், மனநோய், விபத்துக்கள், தீய சேர்க்கை போன்ற பலவித கெடுதல்களும் ஏற்படும். ராகு, கேது இவர்களால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் கெடுதலான பாதிப்புகள் நீங்க ராகு, கேது ஸ்தோத்திரங்களை சொல்வதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் உண்டு. திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் ராகுவுக்கும், கீழ்பெரும்பள்ளம் எனும் இடத்தில் கேதுவுக்கும், தனித்தனி சன்னதிகள் இருப்பதால் அங்கு சென்று வழிபட்டு நாகநாத ஸ்வாமியை வணங்கி வருவது மிக்க நன்மையினை கொடுக்கிறது. இந்த வழிபாடு ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானாவர்களின் அனுபவம். லக்னத்தில் கேதுவும், ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள ஆண் பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். இத்தகைய ஜாதக அமைப்புகள் உள்ளவர்கள் முறையாக வழிபாடு செய்து வந்தால், சீக்கிரம் திருமணம் நிச்சயமாகி விடும்.
அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷபரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில், அவர்களின் நல்லாசி பெற, ராகு பகவானுக்கு கோமேதகம் ரத்தினத்தினையும், கேது பகவானுக்கு வைடூரியம் இரத்தினம், ஆகிய ராசிகல்-க்களை ஒரே மோதிரத்தில் அணியும்போது, முக்கியமாக ராகு, கேது இவர்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம் முதலான தோஷம், ராகு தசை பதினெட்டு வருடங்கள். கேது தசை ஏழு வருடங்கள் ராகுகேது மூலம் உண்டாகும் கெடுதல்களைப் போக்கி எல்லா நன்மைகளையும் பரிகாரம் அடைய முடிகிறது. மேலும் விபரங்களுக்கு...
கொங்கு தேசமான ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் மும்மூர்த்தி ஸ்தலத்தில் ராகு கேதுக்களுக்கான பரிகார பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. ராகு, கேது தோஷங்கள் நீங்குவதற்காக விசேஷமான பூஜைகள் செய்வதற்கு இங்கே அனேக வசதிகள் உள்ளன. கால சர்ப்ப தோஷம், குடும்ப சாப தோஷம், மேலும் எல்லாவிதமான பாம்பு கிரகங்களால் ஏற்படும் தோஷம் காரணமாக, திருமணம் தடைபட்டு வருபவர்களும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி உறவு சரியில்லாமல் கவலைப்படுபவர்களும், குடும்ப சச்சரவுகளால் மன அமைதி இல்லாதிருப்பவர்களும், செய்யும் தொழிலில் விருத்தி இல்லாமல் இருப்பவர்களும் இத்தலத்தினில் ராகு-கேது பரிகார பூசையினை இங்கு செய்ய முடிகிறது. இங்கு அனைத்து நாட்களிலும் பரிகார நிவர்த்தி பூஜைகள் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு...
tag:
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone