05 April 2014

கனகபுஷ்பராகம் (YELLOW SAPPHIR)

கனகபுஷ்பராகம் (YELLOW SAPPHIRE)

கனகம் என்றாலே தங்கம் என்று பொருள் படும், இந்த கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இவைகள் மிகவும் விலை உயர்ந்தவைகள் ஆகும். காண்பவர்களின் மனம் கவரும்.

கனகபுஷ்பரகம் கற்களை மந்தர மலைக்கு ஆபரணமாகவும், பாரியாத்ரா மலைக்கு சிகரமாகவும், தேவேந்திரன் தனது இந்திர சபையினை இந்த இரத்தினத்தினை வைத்து தான் அமைத்தான் எனவும் புராணங்கள் கனகபுஷ்பரத்தினை புகழ்கிறது. இந்த புஷ்பரகத்தினை அணிபவர்கள் வெற்றி மாலையினை அணிவார்கள் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
எப்படி கிடைக்கிறது?
சாதாரணமாக பாறை வெடிப்புகளில், தண்ணீரால் அறுக்கப்பட்ட கூழாங்கல் போன்றும், ஆற்று படுகைகளில் பாறைகளின் அடியில் கூட கிடைக்கின்றது. கடினத்தன்மை 9 என்பதால் இதன் பிரகாசம் நீண்டநாள் குறையாது.

உலகில் பிரேசிலில் தன மிக அதிகமான புஷ்பரகம் கிடைக்கிறது. மேலும், நைஜீரியா தாஸ்மேனியா இலங்கை அமெரிக்கா இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளிலும் மற்றும் தமிழ்நாடு கேரளாவிலும் புஷ்பரகம் கற்கள் கிடைக்கிறது.
புஷ்பரகத்தின் இரசாயன சேர்க்கை (A I 2 O 3) இது கோரண்டம் வகையினை சார்ந்தது ஆகும். உலகத்தில் கிடைத்த புஷ்பராக கற்களில் மிக பெரியது அமெரிக்காவில் உள்ள வில்லி மலை ஆகும். அதன் எடை 34 கிலோ ஆகும். (ஒரு இலட்சத்து எழுபது ஆயிரம் காரட்) 

கனகபுஷ்பரத்தினை அணிய உண்டாகும் நன்மைகள்.
1.                   நல்ல தரமான பிரகாசமான ஒளி உடைய கற்களை அணிய எல்லா செல்வங்களும் கிடைக்கும்.
2.                   தொழில் அமையாமல் இருப்பவர்களுக்கு தொழில் அமைந்து தடை நீங்கும்.
3.                   உடலில் புது பழம் உற்சாகம் உண்டாகும்.
4.             அறிவு, கல்விதிறமை பெருகும். தெளிவான புத்தி சாதுர்யம் உண்டாகும்.
5.                   ஆன்றோரின் தொடர்பும், ஆன்மீக ஈடுபடும், நல்லவர்களின் நட்பும் ஆதரவும் உண்டாகும்.
6.                   எதிரிகள் தானே விலகுவார்கள்.
7.                   ஆசிரியர், ஜோதிடர்கள், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் அறிஞர்கள் புஷ்பரகம் அணிந்து பெரிதும் நன்மைகள் அடையலாம்.
8.                   வயிறு, நுரையீரல் சம்பந்தமான நோய்கள் கட்டுபடிற்குள் வரும். பிரச்சனைகள் நீங்கும்.  விபரங்களுக்கு


ஜாதகப்படி கனகபுஷ்பரகத்தினை யார் அணியலாம்
  1. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர காரர்கள்
  2. தனுசு, மீனா இலக்கின மற்றும் இராசி காரர்கள்.
  3. தற்போது குரு திசை நடந்து கொண்டு இருப்பவர்கள்.
  4. மேஷம், கடகம், சிம்மம், விருட்சிகம், மீனம்,
  5. 3,12,21,30, ஆங்கில தேதியில் பிறந்தவர்கள்.
  6. தேதி மாதம் வருடம் கூட்ட 3 வரும் அன்பர்கள் கனகபுஷ்பரகம் அணிந்து அளவற்ற நன்மைகளை அடையலாம்.

No comments:

Post a Comment