17 April 2014

மரகதம் (Emerald)




 நவரத்தினங்களில் மரகததிற்கு தனிப்பட்ட இடம் உண்டு. மரகதம் என்றால் பச்சை நிறம் நம் மனதில் வந்துநிற்கும். மகாவிஷ்ணுவினை பச்சை மாமலை போல் மேனி உடையவன் என்று கூறுவர். பல கோயில்களில் மரகத லிங்கம் (ம) சிலைகளை வைத்து தினசரி பூஜை செய்து வரு

கிறார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் தெய்வசிலை மரகததினால் செய்யப்பட்டது. திருநள்ளார் சனிஸ்வரர் கோவிலில் பச்சை லிங்கம் உள்ளது. திருக்குவளை திருக்காதவாயல் திரவாயமூர் நாகப்பட்டினம் திருவாரூர் திருமறைகாடு, ஆகிய இடங்களிலும் மரகதலிங்கம் வழிபாடு நடக்கிறது. மரகத கற்கள் பச்சை நிறத்துடன் மென்மையான தன்மை உடையது. நவரத்தினங்களில் மரகதமே அதன் வண்ணத்துடன் சேர்த்து கூறப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டுள்ள எட்டு சொர்கங்களில் அதன் என்ற சுவர்க்கம் மரகத பச்சையில் செய்யப்பட்டது என கூறப்படும்.
       அழகிய பச்சை நிறம்,
      பருமை,
      அழகு மிக்க ஒளி,
      கனம்,

      ஒளி,

ஆகியவை மரகதத்தின் குணங்கள் ஆகும். எகிப்து நாட்டில் கி.மு.1650 ஆண்டுகள் முன்பே மரகத கற்கள் பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

மரகதம் எங்கே கிடைக்கிறது?
கொலம்பியா பிரேசில் ஆஸ்திரேலியா நார்வே ஸ்ரீலங்கா பர்மா ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் ஜெய்பூரிலும் காஷ்மீர் (ம) உதய்பூரிலும், தமிழ்நாட்டில் காங்கேயம் பகுதியிலும் மரகதம் கிடைகிறது. பொதுவாக பச்சை கற்கள் மிக குறைவாக கிடைப்பதால் மரகதத்தின் விலை அதிகம். மரகத்தின் இரசாயன சேர்க்கை Be3(AICr)2Si6O18 ஆகும். கடினத்தன்மை 7.5 என்பதால் எளிதில் நொறுங்கும் தன்மை உடையது. ஆசிட்களில் (ACIDS) கரையும் தன்மை உடையது.
 
மரகதம் அணிவதால் உண்டாகும் நன்மைகள்

1 உடலில் நரம்புகளின் சக்தி அதிகம் ஆகும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
3 அறிவுத் தெளிவு உண்டாகும்
4 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும்
5 பேச்சுத்திறன் அதிகரிக்கும்
6 சோம்பேறித்தனம் மன இறுக்கம் பிரமை பைத்தியம் போன்ற நோய்கள் நீங்கும்.
7 எல்லாவிதமான சுகபோகங்களும் தாமே வந்து சேரும்
8 எப்போதும் மனதில் திருப்தியும், அமைதியும் உண்டாகும்
9 மரகததினால் செய்த தெய்வங்களை வணங்குவதால் எளிதில் பலன் பெறலாம்.
10 மரகதகல்லில் குற்றம் இருந்தால் தீயபலன்கள் அடைய நேரும்.

விபரங்களுக்கு

ஜாதகப்படி மரகதகற்களை யார் அணியலாம்?
அ) ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணிந்து கொண்டு நன்மை அடையலாம்.
ஆ) மிதுனம் கன்னி ராசி, இலக்கினம் கொண்ட அன்பர்கள் மரகதம் அணிந்து மேன்மை அடையலாம்
இ) புதன் திசை, புதன் புத்தி நடப்பில் உள்ளவர்கள் அணிந்து அளவற்ற ஆதாயம் அடையலாம்
ஈ) ரிஷபம், துலாம், மகரம், கும்பம் இராசிக்காரர்கள் ஜோதிடரின் ஆலோசனைப்படி மாரகம் அணிந்து அதிர்ஷ்டம் அடையலாம்
உ) 6 15 24 ம் தேதிகளில் பிறந்தவர்கள் மரகதம் அணிந்து நன்மைகளை அதிகரித்துக்கொள்ளவும்

ஊ) விதி எண் 6 வருபவர்கள் மரகதம் அணிந்து தொழில் முன்னேற்றம் அடையலாம். விபரங்களுக்கு

No comments:

Post a Comment