நவகிரகங்களில் நைசிகர்க வலிமை உடையவர்கள் ராகுவும் கேதுவும் அவார்கள். இதில் இராகு பகவானுக்கு உரிய கல் கோமேதகம் ஆகும். இந்த கற்கள் மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறம் உடையது.
தேன், மற்றும் பசுவின் சிறுநீரின் நிறமுடைய இந்த கோமேதகம் எளிதில் உடைந்துவிடும் இயல்பினை உடையது. இதை அணிபவர்களுக்கு பலன்கள் அதிகம். கோமேதகத்தின் இரசாயன குறியீடு CA3AI2(Sio4)3 கடினத்தன்மை 7 ஆகும்.
கோமேதகம் எங்கு கிடைக்கும்?
இலங்கை அமெரிக்கா கனடா தென்ஆபிரிக்கா மற்றும் இந்தியாவில் ஒரிசா ராஜஸ்தான் தமிழ்நாட்டில் திருச்செங்கோடு பகுதியில் பெருமளவு கோமேதகம் கிடைக்கிறது.
கோமேதகம் அணிவதால் உண்டாகும் பலன்கள்
1 இரகசிய நோய்களை தடுக்கவும், எதிரிகளை அழிக்கவும் கோமேதகம் அணியலாம்.
2 ஜாதகப்படி இராகுவால் தோஷம் ஏற்பட்டால் கோமேதகம் அணியலாம்.
3 ஏமாற்றங்களை குறைய வைக்கும்.
4 பாம்பு தேள் போன்ற விஷ உயிர்களால் உண்டாகும் பயம் விலகும்.
5 மனோ தைரியம் அதிகரிக்கும்.
6 நோய்களை குறைக்கும்.
7 மக்களிடம் செல்வாக்கு புகழ் கூடும்.
8 புதையல் யோகம் தரும்.
9 மாணவர்களின் கல்வித்தடை நீங்கும்.
1௦0 தலை சம்பந்தமான நோய் நீங்கும்.
11 மஞ்சள் காமாலைக்கு மருந்தாக கோமேதகம் கல்லை ஊறப்போட்ட தண்ணீரை பயன்படுத்தலாம். (யாம் பல நபர்களுக்கு இதை பயன்படுத்தியுள்ளோம்)
கோமேதகம் யார் அணியலாம்?
1 இராகுவுக்கு தனி ராசியில்லை எனவே யோகம் தரும் கிரகங்கள் இராகுவினால் பாதிப்பு அடைந்து இருந்தால் கோமேதகம் அணியவும்.
2 ராகு திசை நடப்பவர்கள் கட்டாயம் அணிய வேண்டும்.
3 திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரகாரர்கள் அணிய நன்மைகள் உண்டாகும்.
4 ஆங்கிலதேதிகளில் 4 13 22 31 தேதிகளிலும் விதி எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணிந்து அளவற்ற நன்மைகளை அடையலாம். விபரங்களுக்கு
No comments:
Post a Comment