ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு.
ஆயுத பூஜை என்பது ஸ்ரீசரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக் கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம்.
ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். அனைத்திலும் மேம்பட்டதாகஸ்ரீ கோமதி சக்கரா என்று கூறப்படும் இயற்கையாக கடலில் கிடைக்கும் சக்கரங்களை 11 என்ற எண்ணிக்கையில் வைத்து முறையாக வழிபடலாம். இந்த கோமதி சக்கரத்தில் முப்பெரும் தேவியரும் வாசம் அளிப்பதாக ஆன்றோர் கூறுகிறார்கள். இந்த பூஜை அனுபவத்தில் மிகவும் சிறந்த பலனை தருகிறது.

சரஸ்வதிக்கு உகந்தவை என்று சொல்லப்பட்ட வெள்ளைத் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூ ஆகியவற்றை சரஸ்வதிக்கு அணிவிக்கலாம். இந்தப் பூக்களையே அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம். பழ வகைகளுடன், அவல், பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வைக்கலாம். கடலை சுண்டல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், பால் சாதம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் வைத்து நிவேதனம் செய்யலாம்.
சரஸ்வதி தேவியின் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment