28 October 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-5

வேதத்தின் ஒரு அங்கமாக ஜோதிடம் பாவிக்கப் படுகிறது. ஜோதிட சாஸ்த்திரம் பூவுலகில் நாம் பிறந்த நேரத்தினை கொண்டு கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இணைவுகளை கொண்டு நமது வாழ்க்கையில் என்ன விதமான சம்பவங்கள் உண்டாகக்கூடும் என்பதனை நமக்கு கூறுகிறது. கிரகங்களால் உண்டாகும் நன்மை தீமைகள் ஒரே மாதிரியாக நடந்து வருவது இல்லை. நமது வீட்டில் குளியல் அறை, படுக்கை அறை, சமையல் அறை, விருந்தினர் அறைகள் என எல்லாம் இருந்தாலும், நாம் எப்படி ஒரே சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் உபயோகம் செய்வது இல்லையோ, அது போலவே கிரகங்களும் அதன் வேலைகளை எல்லா நாட்களிலும் செய்வது இல்லை. ஒரு நியதிக்கு உட்பட்டு வரிசைபடியே கிரகங்கள் தங்களின் பலன்களை தருகிறது.


எந்த கிரகம் தற்போது என்ன பலன்களை தருவார், எவ்வளவு காலம் தருவார் என்பதனை நிர்ணயிக்க தெசா புக்திகளை உபயோகம் செய்யும் முறைகளை, பராசர முனிவர் கூறியுள்ளார். அதில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட முறைகள் இருந்தாலும், தற்போது விம்சோத்ரி தசை, அஷ்டவர்க்க தசை ஆகிய இரண்டு மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதிலும் அஷ்டவர்கத்தில் பிந்துக்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. இராசி பிண்டம், கிரகபிண்டம், கிரக குணாகரம் போன்ற பவிதமான உட்பிரிவுகளை பலரும் கணிப்பதே இல்லை.

விம்ஷோத்ரி திசாபுத்தியில் ஒரு சுற்றுக்கு 120 வருடங்களாக கணக்கிடுகிறார்கள். ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப ஆரம்ப திசாபுத்தி அமைகிறது. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஜனன சமயம் செல்லு போக இருப்பு என குறித்து இருப்பார்கள். அதுவே அவரின் முதல் திசை புத்தி ஆகும். அதிலிருந்து

சூரியன் தசை 6வருடம். 
சந்திரன் தசை 10வருடம். 
செவ்வாய் தசை 7வருடம்.  
ராகு தசை 18வருடம். 
குரு தசை 16வருடம். 
சனி தசை 19வருடம். 
புதன் தசை 17வருடம். 
கேது தசை 7வருடம். 
சுக்கிரன் தசை 20வருடம் 

என கிரகங்கள் தங்களின் பலன்களை கொடுக்கும். அதிலும் அதன் உட்பிரிவாக தன் புத்தி முதலாக கொண்டு அனைத்து கிரகங்களும் தமது புத்திகளை நடத்தும். புத்தியின் உட்பிரிவாக அந்தரம் மற்றும் சூட்சும அந்தரம் என பல உட்பிரிவுகள் உள்ளது. அவைகளை கணிப்பதன் மூலம் கிரக பலன்களை துல்லியமாக அறியமுடியும். (தொடரும்) 

27 October 2015

உங்களின் ஜாதகத்தில் வர்கோத்தம கிரகம் உள்ளதா?

ஒரு கிரகம் ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு கட்டங்களிலேயும் ஒரே இடத்தில் இருப்பது வர்கோத்தமம் எனப்படும். இவ்வாறு வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான். அநேக நன்மைகள் உண்டாகும்.

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்



கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும் விபரங்கள்

06 October 2015

ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு செய்வது எப்படி

ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு.
     ஆயுத பூஜை என்பது ஸ்ரீசரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக் கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம்.

     ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். அனைத்திலும் மேம்பட்டதாகஸ்ரீ கோமதி சக்கரா என்று கூறப்படும் இயற்கையாக கடலில் கிடைக்கும் சக்கரங்களை 11 என்ற எண்ணிக்கையில் வைத்து முறையாக வழிபடலாம். இந்த கோமதி சக்கரத்தில் முப்பெரும் தேவியரும் வாசம் அளிப்பதாக ஆன்றோர் கூறுகிறார்கள். இந்த பூஜை அனுபவத்தில் மிகவும் சிறந்த பலனை தருகிறது.

    எமது ஸ்ரீராம் ஜோதிட நிலையத்தில் முறையாக சுத்திகரணம் செய்து, பிரத்தியேகமாக ப்ரோகிராமிங் செய்யப்பட ஸ்ரீ கோமதி சக்கரங்கள் கிடைக்கும். ரூ.600 முதல் ரூ.3,000 வரை பலவிதமான அளவுகளில் கிடைக்கும்.( பார்சல் மற்றும் தபால் செலவு ரூ 100 ) கட்டணம் செலுத்தும் விபரம் க்ளிக் செய்க..



     
சரஸ்வதிக்கு உகந்தவை என்று சொல்லப்பட்ட வெள்ளைத் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூ ஆகியவற்றை சரஸ்வதிக்கு அணிவிக்கலாம். இந்தப் பூக்களையே அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம். பழ வகைகளுடன், அவல், பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வைக்கலாம். கடலை சுண்டல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், பால் சாதம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் வைத்து நிவேதனம் செய்யலாம்.

சரஸ்வதி தேவியின் திருவடிகளே சரணம்.