12 June 2015

திருமணதடை நீக்கும் டர்க்கயிஸ் கற்கள் ( Tourquise )

டர்காய்ஸ் என்பது உபரத்தின வகையைச் சார்ந்தது. பழங்காலத்திலிருந்தே இந்த இரத்தினத்தை மாலையாகவோ, ஆரமாகவோ, வளையலாகவோ, ஒட்டியாணத்தில் பதித்தோ அணியும் வழக்கம் இருந்துவந்திருக்கிறது. இது பச்சையும், நீலமும் சேர்ந்த ஒரு அழகான நிறத்தைக் கொண்டிருக்கும். இதை யார் வேண்டுமானாலும் அணியலாம். தீயபலன்களைக் கொடுப்பதற்கு இந்த இரத்தினத்திற்கே சக்தி இல்லை எனலாம்.

டர்க்காய்ஸ்
 எங்கே கிடைக்கிறது

இந்த இரத்தினத்தின் உருவ அமைப்பு ஜொலிப்புத் தன்மை இருக்காது. இருந்தாலும் தனி அழகைப் பெற்றிருக்கும். இதை ஒருவர் அணியும் தறுவாயில் மற்றவர் கண்ணை கண்டிப்பாகத் தன்வயப்படுத்தும். இதில் ஈரானிய டர்காய்ஸ்களுக்கு மிகுந்த வரவேற்புள்ளது. ஆனால் இந்த ஈரானிய டர்காய்ஸில் கருப்புக் கோடுகள், கருப்பு ரேகைகள், திட்டுத் திட்டான கருப்புப் படிமங்கள் அதன்மேல் படிந்திருக் கும். இவை காலங்காலமாக, ஈரான் நாட்டில் தான் கிடைக்கி றது. ஆனால் தற்போது கற்கள் குறைந்து விட்டதால் இதன் விலை, கலிபோர்னியா, அரிசோனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் டர்காய்ஸை விட அதிக விலை மதிப்புள்ளதாக இருக்கிறது.

முதன் முதலில் துருக்கியர்களே இதை அதிகம் பயன் படுத்தியதால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே Tourquise என்று பெயரிட்டு அணிந்து பயன் பெற்றதாகப் பல வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://ptk2numerology.blogspot.in/
டர்க்வாய்ஸ்
 இந்தக் கற்கள் நிறம் மாறும் தன்மையைக் கொண்டது. சமயத்தில் தன் நிறத்தை இழந்து வெளுத் தும் விடும். இதில் அலுமினியம், பாஸ்பாரிக் ஆசிட், கொப்பர் ஒக்ஸைட், தண்ணீர் போன்ற பல தாதுப் பொருட்கள் உள்ளடங்கியிருக்கின்றன. இதன் கடின தன்மை  5 முதல் 6 வரை ஆகும். ஒப்படர்த்தி 2.7 ஆகும். இதன் ஒளிவிலகல் 1.61 என்பதாகும்.

 யார் அணியலாம்.


இந்த இரத்தினத்தை குருவுக்காகவும், சனிக்காகவும், சூரியனுக்காகவும், கனக புஷ்பராகம், நீலம், மாணிக்கம் போன்ற மூன்று இரத்தினத்திற்கு பதிலாகவும் அவரவர் ஜாதகத்தை ஆராய்ந்தபின் அணியலாம். இங்கு டர்காய்ஸ் ஒரு உபரத்தினம் மட்டுமே.... மாணிக்கம், கனக புஷ்பராகம், நீலம் போன்ற நவரத் தினக்கற்களுக்கு சமமான சக்தி டர்காய்ஸில் கண்டிப்பாக இராது. மேலும் திருமணம் கூடாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த இரத்தினத்தை அணிந்து நன்மைகளை அடையலாம்.

டர்க்காய்சின் மருத்துவ பலன்கள்.


இந்த இரத்தினத்தை அணிந்து மருத்துவ ரீதியாகப் பலன் பெற்றிருப்பவர் பலர். முக்கியமாக தொண்டை பிரச்சினைகள், இளமைக் குறைவு, வசீகர சக்தி மந்தமாதல், சூட்டினால் ஏற்படும் சிரமங்கள், ஈரல் கோளாறுகள், அதிக சோர்வு இவற்றினால் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் எந்த ஜாதகராக இருந்தாலும், எந்த ராசி, எந்த நட்சத்திரம், எந்த லக்னம், கோச்சாரம், திசா புத்தியாக இருந்தாலும் இதை அணிந்து நன்மை அடையலாம்.
http://ptk2numerology.blogspot.in/
ஈரான் டர்க்குவாய்ஸ்

எப்படி அணியலாம்.



இந்த இரத்தினத்தை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற எந்த உலோகத்திலும் பதித்து அணியலாம். மூன்று கேரட்டுக்கு மேல் இருந்தால் சிறப்பு. மோதிரத்திற்குப் பின்னால் திறப்பு வைத்தே அணிய வேண்டும். இந்த இரத்தினத்தை உரிய முறையில் பதித்து அணிவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் சுத்தப்படுத்திய பின்னரே பலன் கிடைக்கும். இல்லையேல் இது அழகுக்கு மட்டும் பயன் படுத்தும் கல் போன்றே விளங்கும். 

பூமியில் கடவுளால், இயற்கையினால் உருவாக் கப்பட்ட பொருட்கள் பல உள்ளது. அதில் ஒன்று தான் இரத்தினங்கள். இரத்தினங்களின் சக்தியை அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்காகத் தந்துள்ளனர். அவற்றை முறைப்படி தெரிந்து, அறிந்து உபயோகிக்கும்போது பலன் நிச்சயம் என்பதை அணிந்தவர்கள் உணர்ந்திருப்பதை போல நீங்களும் அறிந்து பலன் பெறுவீர்களாக.மேலும் அதிக தகவலுக்கு 7667745633

No comments:

Post a Comment