ஜிர்கான்
zircon stones எனப்படும் இந்த கற்கள் பளபளப்பில் வைரத்தினை போன்றே பிரகாசிக்கும். மற்ற கற்களை விட இதன் அடர்த்தி அதிகம். (zicon=4.7, diamond=3.62) எனவே எளிதில் உடையாது. ஜிர்கான் பலநிறங்களில் கிடைத்தாலும் நிறமற்ற கற்களே வைரத்திற்கு மாற்றாக கருத படுகிறது. மற்றவை ரத்தினமாக கருதப்படுவது இல்லை.கிடைக்கும் இடங்கள்.
வியட்நாம், தாய்லாந்து, இலங்கையில் அதிகம் கிடைக்கும் இந்தவகை கற்கள் மதிப்பு மிக்கவைகளாகும்.
யார் அணியலாம்?
1. வைரம் அணிய நினைக்கும் அனைத்து நபர்களும் அணியலாம்.
2. 5, 14, 23 ம் தேதியினரும், விதி எண் 5 வருபவர்களும் அணியலாம்.
3. ரிசபம், துலாம் இராசி, இலக்கினமாக வரும் அன்பர்கள் அணிந்து ஆனந்தம் அடையலாம்.
4. சுக்கிர திசை, புத்தி நடப்பில் உள்ள அனைவரும் அணியலாம்.
அணிபவர்கள் அடையும் நன்மைகள்.
1. வாதம், பித்தம், கபத்தினை சமன் செய்து ஆரோக்கியத்தினை உறுதியாக்கும்.
2. மனதுக்கு உற்சாகம் தரும்.
3. உடல் அழகினை அதிகரிக்கும்.
4. வைரத்திற்க்கான அனைத்து பலன்களையும் அடையலாம்.
குறிப்பு:
அதிகம் போலி கற்கள் புழங்கும் கற்களில் ஜிர்கான்-ம் ஒன்று. அமெரிக்கன் டைமண்ட் எனப்படும் செயற்கை கற்களை ஜிர்க்கான் என கூறி விற்று விடுகிறார்கள். எனவே ஜிர்கான் வாங்கும் அன்பர்கள் நன்கு விசாரித்து வாங்கவும்.
ஜிர்க்கான், வாங்க முடியாத பட்சத்தில் வெள்ளை புஷ்பராகம், அல்லது வெள்ளை குவார்ட்ஸ் கற்களை அணிந்து பயன் அடையலாம்.
மேலும் விபரங்களுக்கு: க்ளிக்