04 April 2015

ஸ்படிக கிறிஸ்டல் மணிகள் Quarts stones


ஸ்படிக லிங்கம்
நமது நாட்டில் இந்துக்கள் ஸ்படிக கற்களை புனிதக் கல்லாக வைத்து வணங்குகிறார்கள். பயன்படுத்தவும் செய்கிறார்கள். ஆலயங்களிலும் வீடுகளிலும் ஸ்படிகத்தினை லிங்கம், மற்றும் பலவிதமான தெய்வீக சிலைகளாகவும், வழிப்பாட்டு யந்திரம், மற்றும் மாலைகளாகவும் பயன்படுத்தி வணங்கி பயன் அடைகிறார்கள்.  நம் முன்னோர்கள் ஸ்படிகம் எனப்படும் கிரிஸ்டல் கற்களை மாலைகளாக அணியும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் உடலுக்கு எப்போதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. பல நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது. 


விஞ்ஞான ரீதியாக கிறிஸ்டல் கற்கள் தன்னுள் இருந்து மணிக்கு 21600 அதிர்வு அலைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கற்கள் எந்த ஓர் சக்தியையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. சக்திகளை எப்போதும் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த மூன்று குணங்களும் தன்னுள் அடக்கி, அற்புத ஆற்றல் பெற்ற இந்த கற்களை எலக்ட்ரானிக் கருவிகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைய அறிவியல் உலகில் அனைத்து கருவிகளும் இயங்குவதற்கு அதி முக்கியமாக தேவைபப்டுவது குவார்ட்ஸ் கிரிஸ்டல்கள் எனப்படும் ஸ்படிகக் கற்கள் என்றாலும் மிகையில்லை.

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது? அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன்? அதனை ஏன் அணிய வேண்டும்?

ஸ்படிகங்கள் பூமிக்கு அடியில் வெப்பத்தாலும்அழுத்தத்தாலும் உருமாறியுள்ளன. இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள். இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.

உயர்ந்ததான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது  நீரோடு நீராக ஒன்றி இருக்கும், உற்று பார்த்தே உணர முடியும் தனியாக தெரியாது. அசல் ஸ்படிக மணிகளை ஒன்றுடன் ஒன்று உரசும் பொது தீப்பொறி உண்டாவதை காண முடியும். போலியில் தீப்பொறி உண்டாகாது. முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பலவிதமான தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.

முதல்தர மாலை 108 மணிகளைக் கொண்டது சுமாரான 8mm அளவு உள்ளது முதல் அணியலாம். அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் , முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது. சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள். அது நல்லதல்ல.
துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
ஸ்படிக மாலை


உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் அற்புதமான அறிவியல் உள்ளது. மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா? சராசரியாக 21,600 மூச்சாகும். நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்). இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.

தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும். மேலும் .. ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு , அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது, அதாவது அதனால் அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர்  கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும். (ஆலோசனை தரும் தொழிலில் உள்ளவர்கள் கவனிக்க) இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும். கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது. கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள். விலை பற்றி அறிய

No comments:

Post a Comment