அற்புதமான எண்கணித கலை என்னும் நியூமராலாஜி யின், வெற்றியினை அதன் ரகசியமான சத்திகளை உணர வேண்டும் எனில் நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலில் முக்கியமான மூன்று விசயங்களை பற்றி சிந்திக்க வேண்டும். அவைகள் ஆற்றல், அலைவரிசை, மற்றும் அதிர்வு, இந்த மூன்றும் தான் இந்த முழு பிரபஞ்சத்தினையும் இயக்கி வருகிறது.
இவைகளை சுற்றியே நமது வழிபாடுகளும், நாம் செய்யும் பரிகார முறைகள், அனைத்தும் செயல் படுகிறது.
எந்த ஒரு செயலுக்கு பின்னரும் ஆற்றலானது வேறு பரிநாமத்தினால் செயல் பட்டுக்கொண்டே இருக்கும். உதாரணமாக வெப்பத்தின் ஆற்றல் நீரினை ஆவியாக்குகிறது. அதிகமான நீராவியின் ஆற்றலினை வைத்து பலவிதமான செயல்களை செய்கிறோம். பின்னர் நீராவி மழையாக தனது ஆற்றலை மாற்றிக்கொண்டு வருகிறது. அதனை எடுத்துக்கொண்டு மரம் வளர்கிறது. அது மீண்டும் விறகாகி வெப்ப சக்தியினை கொடுக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே உருவான மரங்கள் கூட நிலக்கரியாகவும், பெட்ரோலிய பொருள்களாகவும் தன்னுடைய ஆற்றலை மாற்றிக்கொள்கிறதே தவிர ஆற்றல் ஒருபோதும் அழிந்து போவது இல்லை. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி நாம் அனைவரும் ஒருவிதமான பொதுவான ஆற்றலுக்கு கட்டுப்பட்டே வாழ்ந்து வருகிறோம் என்பதும் நமக்கு புரிகிறது அல்லவா?
இவைகளை சுற்றியே நமது வழிபாடுகளும், நாம் செய்யும் பரிகார முறைகள், அனைத்தும் செயல் படுகிறது.
முதலில் ஆற்றல்.
ஆற்றல் என்பதனை சக்தி எனவும் கூறலாம். எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆற்றல் என்பது இன்றியமையாதது. எந்த ஒரு ஆற்றலையும், நம்மால் ஆக்கவோ அழிக்கவோ முடியவே முடியாது. ஆனாலும் ஆற்றலை ஒரு நிலையில் இருந்து வேறு ஒரு நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியும். ஆற்றல் வெவ்வேறு பரிணாமங்களில் வெவ்வேறு நிலையினை அடையும். அந்த நிலைகளுக்கு ஏற்ப ஆற்றல் ஆக்கும் சக்தியாகவோ, அல்லது அழிவு சக்தியாகவோ செயல் படுகிறது.எந்த ஒரு செயலுக்கு பின்னரும் ஆற்றலானது வேறு பரிநாமத்தினால் செயல் பட்டுக்கொண்டே இருக்கும். உதாரணமாக வெப்பத்தின் ஆற்றல் நீரினை ஆவியாக்குகிறது. அதிகமான நீராவியின் ஆற்றலினை வைத்து பலவிதமான செயல்களை செய்கிறோம். பின்னர் நீராவி மழையாக தனது ஆற்றலை மாற்றிக்கொண்டு வருகிறது. அதனை எடுத்துக்கொண்டு மரம் வளர்கிறது. அது மீண்டும் விறகாகி வெப்ப சக்தியினை கொடுக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே உருவான மரங்கள் கூட நிலக்கரியாகவும், பெட்ரோலிய பொருள்களாகவும் தன்னுடைய ஆற்றலை மாற்றிக்கொள்கிறதே தவிர ஆற்றல் ஒருபோதும் அழிந்து போவது இல்லை. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி நாம் அனைவரும் ஒருவிதமான பொதுவான ஆற்றலுக்கு கட்டுப்பட்டே வாழ்ந்து வருகிறோம் என்பதும் நமக்கு புரிகிறது அல்லவா?
அடுத்து அலைவரிசை
நம் மனநிலைகள் மூளையில் சிலவித மின் அலைகளை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகள் எலெக்ட்ரோசெபாலோக்ராஃப் (electrocephalograph - EEG) என்ற கருவியால் அளக்க முடிந்தவை. அவை ஒரு வினாடிக்கு எந்த அளவு ஏற்படுகின்றன என்பதை சிபிஎஸ் (Cycles per second –CPS) என்பதை வைத்து அளக்கின்றனர். அவை நான்கு வகைப்படும்.
பீட்டா அலைகள் (Beta Waves) –பதினான்கிற்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலை வரிசையிலேயே.
ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) -எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும்,அரைத்தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும்.
தீட்டா அலைகள் (Theta Waves) – நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன.
டெல்டா அலைகள் (Delta Waves) – நான்கிற்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தை களிடம் காணப்படுகின்றன. யோகிகள்,சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன.
1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, அந்த அதீத சக்தி வெளிப்படும்போது குறிப்பிட நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.
முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.
புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதில் சாதாரண மனநிலை எனப்படும் 13 என்ற நிலைமுதல் மிகவும் தீவிரமான பரபரப்பான மனநிலையான நிலை வரை 40 கூறியுள்ளார்கள்.
அடுத்து அதிர்வு
முன்கண்ட இந்த நான்கு அலைகளில் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன. அது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது. அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள் என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மை யிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, அதிர்வுகளாக சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம். இதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நம்மை எந்த ஒரு தளத்திற்கும் கொண்டு செல்லும் சூட்சுமத்தினை அறிய வைத்து உங்களை முற்றிலும் புதிய நிலைக்கு கொண்டு செல்லும் முயற்ச்சியே எண் கணிதமாகும். அதாவது, புரியும்படி கூறின் சரியான ஆற்றலை, சக்திவாய்ந்த அலைவரிசையில் செலுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உண்டாக்கிக்கொண்டு வெற்றியாளராக மாறவேண்டும் என்பதேயாகும். இதனால் எண்கணிதத்தின் துணையினால் நம்முடைய இயற்க்கையின் விதிகளை அறிந்து, சரியான அலைவரிசையில் மாற்றிக்கொண்டு, நம் வாழ்வில் வெற்றி பெற, மகிழ்ச்சியினை அடைய இன்றே முடிவு செய்வோம். அனைவரும் இயற்கையின் சக்தியினை எண்கணிதத்தின் துணையினால் பயன்பெறுவீர்.
No comments:
Post a Comment