நமக்கு அருள் கொடுக்க எந்த நேரமும் தயாராக இருக்கும் மிகவும் எளிமையாக அடையக்கூடிய சித்தர்களை நமது நட்சத்திரத்தினை வைத்து கண்டு பிடித்து அவர்களை சரண் அடைந்து வாழ்க்கையில் நலம் பெறுங்கள். தொடர்ந்து படியுங்கள்..... சித்தர்கள் திருவடியே சரணம்.
சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?
இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.
சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.
- அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி
- பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி
- கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
- கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
- ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்
- மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
- மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
- ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
- மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
- மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
- திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
- புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
- புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
- பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்)
- ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
- மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
- உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
- உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்; ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில், ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
- அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
- சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.
- சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
- சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
- விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
- விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்
- அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
- கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
- மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
- பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.
- உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
- உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
- திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
- அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
- சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
- பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர். ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி, பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
- பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
- உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
- ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி
ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம் 82,83,84,85.