நல்ல தரமான வைடூரியம் கதிரவனின் ஒளியை தன்னுள் வாங்கி மின்னல் போன்ற ஒளியை கல்லின் குறுக்கே கொண்டிருக்கும். பார்வைக்கு கல் இரண்டாக விரிசல் விட்டுவிட்டதோ என தோன்ற வைக்கும். இருட்டில் பூனையின் கண்கள் உள்ளது போல தோன்றுவதால் இதை ஆங்கிலத்தில் CATS EYE என்று கூறுகிறார்கள். பழுப்புநிறமுள்ள மணியில் வெள்ளை நிற ஒளிக்கீற்றுடன் காணப்படும் வைடூரிய ரத்தினங்கள் க்ரிசொபெரில் (Chrisoberyl) என்னும் வகையினை சேர்ந்தது. குவார்ட்ஸ் (Quarts) வகை கற்களிலும் வைடூரியம் கிடைக்கிறது. விபரங்களுக்கு
வைடூரியத்தின் மத்தியில் இருக்கும் நூல் போன்ற சுழலும் ஒளிக்கற்றை, நாம் எப்படி திருப்பி பார்த்தாலும் அழகாக சுழலும். அந்த கோடுகள் எவ்வளவு குறுகலாகவும், கூர்மையாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு சிறப்பானதாகும் என கூறப்படுகிறது. விலையும் அதிகம். வைடூரியங்கள் காபிகொட்டை, ஈச்சங்கோட்டை, வடிவத்திலேயே பட்டை தீட்டப்படுகிறது.
வைடூரியம் எங்கு கிடைக்கும்?
கிரிசொபெரில் வகை கற்கள் ஸ்ரீலங்கா, பிரேசில், இங்கிலாந்து, வட அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் கேரளாவிலும், ஒரிசா மாநிலத்திலும் கிடைக்கிறது. ஸ்ரீலங்காவில் கிடைக்கும் வைடூரியமே மிகவும் விலையுள்ளவை.
இன்று உலகளவில் 66 காரட் எடையுள்ள வைடூரியம் வாஷிங்க்டன் நகரில் உள்ளது. வைடூரியம் கிசொரிபெரில் வகையினை சேர்ந்தது. இதன் குறியீடு (BeAI2O4) ஆகும். கடினத்தன்மை 8.5 ஆகும். குவார்ட்ஸ் வைடூரியத்தின் கடினத்தன்மை 7 ஆகும். இதன் ரசாயன குறியீடு (Si02) ஆகும். இந்த இரண்டுவகை கற்களும் பெரும்பாலும் செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை.
வைடூரியம் அணிவதால் உண்டாகும் நன்மைகள்.
- மனதில் உற்சாகம், நிம்மதியினை கொடுக்கும்.
- மற்றவர்கள் பணிந்து நடப்பார்கள்.
- அறிவுக்கூர்மையும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.
- செல்வம் புகழ் உண்டாகும்.
- சுவாசநோய்கள் குணமாகும்.
- நீண்ட ஆயுளினை தரும்.
- ஞானமார்க்கத்தினை தரும்.
வைடூரியம் யார் அணிய வேண்டும்.!!
- கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்.
- இலக்கினம், அல்லது சந்திரா இலக்கினம் இவற்றில் கேது இருப்பவர்கள்.
- தற்போது கேது தசை நடப்பில் இருப்பவர்கள்.
- தசாநாதன் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தாலோ அல்லது கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ வைடூரியம் அணிந்து அளவற்ற நன்மைகள் அடையலாம்.
- ஆங்கில தேதிகளில் 7, 16, 25ம் தேதிகளில் பிறந்தவர்கள், தேதி+மாதம்+வருடம் கூட்ட விதிஎண் 7 வருபவர்கள் வைடூரியம் அணிந்து மேன்மை அடையல்லாம்.