நவரத்தினங்களில் பெருமையும் மென்மையும் அழகும் மிகுந்தது முத்துக்களே ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழரின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய பெருமை பெற்ற முத்துக்களையே சாரும். முத்துக்களை மாலையாகவும், ஆரமாகவும், மோதிரமாகவும், பயன்படுத்துவர். விபரங்களுக்கு
முத்துக்களின் வகைகள்
வட்டம், அனுவட்டம், ஒப்பு, குறு, சப்பாத்தி, இரட்டை, கரடு என பல வகைகள் இருந்ததாக சோழநாட்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றது. பொதுவாக முத்துக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். மஞ்சள், இளம்சிவப்பு, கத்தரிபூ, பச்சை, நீலம், கறுப்பு ஆகிய முத்துகளும் கிடைக்கும். முத்துக்களில் உருண்டையான முத்துகளுக்கே மதிப்பும் விலையும் அதிகம். இதன் இரசாயன சேர்க்கை (CACO3C3H18nH2O) ஆகும். இதன் கடினத்தன்மை 3 ஆகும். மற்ற ரத்தினங்களை முத்து கற்பாறைகளில் இருந்து உருவாவதில்லை. கடலில் காணப்படும் ஒரு சிப்பியிடத்தில் உருவாகின்றது. சிப்பியினுள் நுழைந்த மண்துகள் சிப்பியின் வயிற்று தசையிலிருந்து வெளிவரும் சுண்ணாம்பு சத்து நிறைந்த திரவத்தினால் காலப்போக்கில் உருவாகி வருவதே முத்துகள் ஆகும்.
முத்துக்களை அணிவதால் உண்டாகும் பலன்கள்
- வெண்முத்து அணிந்தால் சகல பாவங்களும் போகும், ஆயுள் அதிகரிக்கும்.
- மஞ்சள் முத்துக்கள் செல்வத்தினை தரும்.
- சிகப்பு முத்துக்கள் அறிவையும், புகழையும் கொடுக்கும்.
- நீல முத்துக்கள் சகல பாக்கியங்களையும் கொடுக்கும்.
- தரமான முத்து அணிந்தவர் வீட்டில் கால்நடை விருத்தியாகும்.
- மனோதிடம், மனநிம்மதி, தன்னம்பிக்கை அதிகமாகும்.
- கலைகளிலே நிபுணத்துவம் உண்டாகும்.
- தண்ணீரில் கண்டம் விலகும்.
- வெளிநாட்டு யோகம் உண்டாகும்.
- புத்திர பக்கியத்தினை ஏற்படுத்தும்.
ஆனால் எக்காரணத்தினை கொண்டும் அடுத்தவர் உபயோகம் செய்த முத்துக்களை வாங்கி அணியக்கூடாது. அவை தீமையினையே தரும்.
முத்துகளை யார் அணியலாம்?
1. ரோஹினி, அஸ்தம், திருவோணம், நட்சத்திரகாரர்கள்
2. கடக இராசி, இலக்கினகாரர்கள்.
3. ஜாதகப்படி சந்திரன் திசை நடப்பவர்கள்.
4. ஆங்கில மாதத்தில் 2 11 20 29 ம் தேதி பிறந்தவர்கள்.
5. விதி எண் 2 வருபவர்கள்.