07 November 2013

2 11 20 29 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

  சந்திரன் ஆதிக்க பெற்ற நேயர்களே!
   
   இந்த எண்ணில் பிறந்த நீங்கள் எந்த காரியமானாலும் அதை சுறுசுறுப்புடன் குறித்த நேரத்தில் முடிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் பிறர் உதவியின்றி தானே முடிக்கும் ஆற்றல் பெற்றவர் நீங்கள. உறவினர்கள், நண்பர்களுடன் பற்றுதலாக இருப்பீர்கள். பிறரால் துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் தன்மையுடைய உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெண்மையாகும். பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு செல்வாக்கு உடையவர்களான நீங்கள் எவரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். உங்களின் மன வேகத்துக்கு உங்களின் உடல் ஒத்துழைக்காது. எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பின் மெதுவாகவே செய்யும் குணமுடையவர்கள். எல்லா வகையான சாமர்த்தியங்கள் இருந்தாலும் உழைப்பில் மனம் ஈடுபடாது. சோம்பல் இருந்து கொண்டே இருக்கும். சிறிய துன்பங்களைக் கூட கற்பனையில் பெரிதாக்கி அதனால் தேவையில்லாத கவலைக்குள்ளாவார்கள். வீணாகக் கவலைப் பட்டு வாழ்க்கையை பிரச்சினை ஆக்கி விடுவார்கள். என்னதான் தைரியமாக இருந்தாலும், பேசினாலும் மனதில் பயம் கொண்டிருக்கும். தானே ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தால் பல முறை யோசனை செய்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். ஒருவரின் கீழ் வேலை செய்வதையே விரும்புவீர்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது. நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும்.இறைநம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது.  மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. மனைவியுடன் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். இவர்களுக்கு உண்மையான நண்பர்களே இல்லை எனலாம். என்னதான் உதவி செய்தாலும் மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்பையே காட்டுவார்கள். ஆகவே இவர்கள் வீண் சந்தேகத்தை கை விடுதல் நல்லது.  இவர்களில் பெரும் பாலோருக்கு சீக்கிரமே தொந்தி ஏற்பட்டு விடும். அல்லது இளைத்துக் காணப் படுபவர்களுக்கு சூடு தொடர்பான நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உடல் உழைப்பு குறைவே இதற்குக் காரணம்.

No comments:

Post a Comment