21 December 2013

3 12 21 30 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

     இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் குரு ஆகும். குரு மிகவும் வலிமை வாய்ந்த கோளாகக் கருதப் படுகிறது.
     


    இவர்களில் பெரும் பாலோர் நடுத்தர உயரம் உடையவர்கள். வட்ட முகமும், அழகான கண்களையும் உடையவர்கள். நிமிர்ந்த நடையும், கம்பீரமான தோற்றமும் உடையவர்கள். இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்குக் கீழ்படிதல் போன்ற குணங்கள் அமையப் பெற்றவர்கள். நாணயத்தையும், கௌரவத்தையும், நல்ல பெயரையும் உயிராகக் கருதக் கூடியவர்கள். இந்த எண்ணைப் பெற்று பிறந்தவர்கள் காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பார்கள். வேலையில் கண்டிப்பு உள்ளவர்களாகவும், எந்த காரியமானாலும் அதை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். கையில் பணம் இருந்தால் முன் பின் யோசிக்காமல் செலவு செய்து விட்டு பின் தேவைப் படும் போது கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். அதிக கூர்மையான அறிவும், உழைப்பும் இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள் ஆதலால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று எல்லோராலும் பாராட்டப் பெறுவார்கள். சிறு வயது முதலே பொறுப்பை உணர்ந்து போற்றும் படியாக நடந்து கொள்ளுவார்கள். பேச்சில் கண்ணியமும், அதே வேளையில் கண்டிப்பும் இருக்கும். நல்ல செயல்களும், பழக்கமும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் பிறரிடம் உதவி கேட்க மாட்டார்கள். இவர்கள் கடினமான உழைப்பாளிகள். கல் மனம் போன்று தோன்றினாலும் உண்மையிலேயே மென்மையான உள்ளம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் நியாயமான முறையிலேயே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதிக இறை நம்பிக்கை உடையவர்கள்.தம் வேலைகளை விட மற்றவர்களின் வேலைகளை செய்வதில் அதிக அக்கறை உடையவர்கள். எனவே பொது காரியங்களில் இவர்களை அதிகம் காணலாம். அளவுக்கு மிஞ்சிய ஆசை கொள்ள மாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் உண்மையுடனும், திருப்தியுடனும் செயலாற்று வார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார்கள். பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். ஆனால் இவர்களில் பெரும் பாலோர் காதலில் தோல்வியையே அடைவார்கள். ஆனாலும் இல் வாழ்க்கை சிறப்பாகவே அமையும். இவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும். நரம்பு தொடர்பான நோய்கள், வாத தொடர்பான நோய்கள் இவர்களை துன்பப் படுத்தும். உடற் பயிற்சியின் மூலமும், குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தும் பழக்கமும் அமைத்துக் கொண்டால் ஓரளவு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இவர்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், பேராசியர்களாகவும், வங்கியில் பணி புரிபவர்களாகவும் இருக்கலாம்.

07 November 2013

2 11 20 29 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

  சந்திரன் ஆதிக்க பெற்ற நேயர்களே!
   
   இந்த எண்ணில் பிறந்த நீங்கள் எந்த காரியமானாலும் அதை சுறுசுறுப்புடன் குறித்த நேரத்தில் முடிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் பிறர் உதவியின்றி தானே முடிக்கும் ஆற்றல் பெற்றவர் நீங்கள. உறவினர்கள், நண்பர்களுடன் பற்றுதலாக இருப்பீர்கள். பிறரால் துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் தன்மையுடைய உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெண்மையாகும். பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு செல்வாக்கு உடையவர்களான நீங்கள் எவரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். உங்களின் மன வேகத்துக்கு உங்களின் உடல் ஒத்துழைக்காது. எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பின் மெதுவாகவே செய்யும் குணமுடையவர்கள். எல்லா வகையான சாமர்த்தியங்கள் இருந்தாலும் உழைப்பில் மனம் ஈடுபடாது. சோம்பல் இருந்து கொண்டே இருக்கும். சிறிய துன்பங்களைக் கூட கற்பனையில் பெரிதாக்கி அதனால் தேவையில்லாத கவலைக்குள்ளாவார்கள். வீணாகக் கவலைப் பட்டு வாழ்க்கையை பிரச்சினை ஆக்கி விடுவார்கள். என்னதான் தைரியமாக இருந்தாலும், பேசினாலும் மனதில் பயம் கொண்டிருக்கும். தானே ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தால் பல முறை யோசனை செய்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். ஒருவரின் கீழ் வேலை செய்வதையே விரும்புவீர்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது. நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும்.இறைநம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது.  மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. மனைவியுடன் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். இவர்களுக்கு உண்மையான நண்பர்களே இல்லை எனலாம். என்னதான் உதவி செய்தாலும் மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்பையே காட்டுவார்கள். ஆகவே இவர்கள் வீண் சந்தேகத்தை கை விடுதல் நல்லது.  இவர்களில் பெரும் பாலோருக்கு சீக்கிரமே தொந்தி ஏற்பட்டு விடும். அல்லது இளைத்துக் காணப் படுபவர்களுக்கு சூடு தொடர்பான நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உடல் உழைப்பு குறைவே இதற்குக் காரணம்.

05 November 2013

1 10 19 28 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

ஒன்றாம் எண்ணில் பிறந்த சூரியன் ஆதிக்கம் கொண்ட நீங்கள், மிகவும் தந்திர சாலிகளாக இருப்பீர்கள்.
      
    பிறரால் செய்ய முடியாத, முடிக்க முடியாத காரியத்தை தன் தந்திர யுக்தியைக் கொண்டு முடித்து விடுவீர்கள். உடலை வருத்தி உழைக்காமலே வருமானம் வரும் பாக்கியம் உங்களுக்கு உண்டு.எதிலும் வெற்றி அடைய வேண்டும், முன்னேற்றம் அடைய வேண்டும்என்ற குறிக் கோள் உடைய நீங்கள்  செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதை வெகு சுறுசுறுப் புடனும் , உற்சாகத்துடனும், சீக்கிரமாக முடிக்கும் திறன் உள்ளவர்கள். பொதுவாக சாந்த குணம் உள்ளவர்கள். இவர்களுக்கு 8 வயது முதல் 11 வயதிற்குள் ஒரு கண்டமும், 22க்கு மேல் 25க்குள் ஒரு கண்டமும் ஏற்பட்டு விலகும்.ஆனால் உயிருக்குஆபத்து ஏதும் இல்லை. 32க்கு மேல் 34 வயதிற்குள் வாத தொடர்பான நோயால் உடல் நலம் குன்ற வாய்ப்புண்டு. 32-48-58 வயதுகளில் வாதத்தால் துன்பம் ஏற்படும். 24 வயது முதலே தொழில் முறையில் முன்னேற்றம் ஏற்படும்.27-36 வயது வரை தொழில் எதுவானாலும் படிப்படியாக உயரும். பொதுவாக வரவும், செலவும் சரி சமமாக இருக்கும். இவர்கள் எப்போதும் சந்தன நிற சட்டையும் இடுப்பிற்குக் கீழே வெண்ணிற ஆடையும் அணிவது நல்லது. மாணிக்க இரத்தினக் கல் விசேடமானது. அதை  தங்க மோதிரத்தில் பதித்து கையில் போட்டுக் கொள்ளலாம். பெயர் எண் சரியாக அமையாது போனால் மிகவும் சாதாரணமான வாழ்க்கையே அமையும். இவர்கள் 8-17-26-35-44-53---9-18-27-36-45- போன்ற எண்களில் பெயர் அமைந்து இருக்க விதியின் கைப்பாவை ஆகிவிடுவீர்கள்.

Fate in Date; Fame in name

The Best In Numerology

அனைவரும் அதிர்ஷ்டசாலிகளே!!!




29 October 2013

நியூமராலஜி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

எண்கணிதம் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டிய பலபல குறிப்புக்களை இங்கே காணலாம்