10 July 2025

 
உங்கள் மொபைல் எண் பொருத்தமாக உள்ளதா?
இலவசமாக அறிந்து கொள்ளவும்.

09 July 2025

ஜோதிட கேள்வி பதில்.

முக்கூட்டின் நடுவனை

அக்கூட்டின் கடையன் கூட...

முழூகூட்டின் கடையோன்

பாங்காய் சாய்ந்து

உச்சமான நடுவனை

மூன்றினால் முறைத்து பார்த்தால்...

கடையோன் உள்ள இடம்

குடத்திரண்டா ஒன்றா?


பாடல் விளக்கம்:

முக்கூட்டின் நடுவனை - முக்கூட்டு கிரகம் எனும் கிரகங்களான சூரியன் புதன் சுக்கிரன் எனும் மூன்று கிரகங்களில் மையத்தில் உள்ள சூரியனை,

அக்கூட்டின் கடையன் கூட - அந்த மூன்று கிரகங்களில் இறுதியில் உள்ள கிறக்கமான சுக்கிரன் கூடி உள்ளது.

முழூகூட்டின் கடையோன் - முழுமையான நவக்கிரக அமைப்பில் இறுதி கிரகமான சனி பகவான்,

பாங்காய் சாய்ந்து - அழகாக வசதியாக அமர்ந்து கொண்டு,

உச்சமான நடுவனை - நடு கிரகமான உச்சம் பெற்ற சூரியனை

மூன்றினால் முறைத்து பார்த்தால் - மூன்றாம் (தைரிய வீரிய ஸ்தான) பார்வையினால் பார்த்தால்

கடையோன் உள்ள இடம் - அந்த சனி பகவான் உள்ள ராசி,

குடத்திரண்டா ஒன்றா? - குடம் எனப்படும் கும்ப ராசிக்கு இரண்டிலா அல்லது கும்பத்திலா?

என்பது இந்த பாடலின் கேள்வி ஆகும்.


பதில்:

சூரியன் உச்சம் பெறுவது மேஷத்தில் என்பதால், அதனை மூன்றாம் பார்வையில் சனி பார்க்கிறது எனில், சனி கும்பத்தில் இருந்தே பார்த்து இருக்கும். ஆக விடை குடத்திரண்டு அல்ல, ஒன்றே ஆகும்.